அரநாயக்கவில் இன்றும் ஒரு சடலம் : மண்சரிவு இடம்பெற்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கண்டெடுப்பு

Published By: MD.Lucias

03 Jun, 2016 | 05:24 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

அரநாயக்க மண்சரிவில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கான  பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள தருவாயில் இன்றைய தினம் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மண்சரிவினால் புதையுண்ட கிராமங்களில் ஒன்றான பல்லேபாகே பகுதியிலிருந்தே குறித்த சடலம் மீட்கபட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 17 ஆம் திகதி அரநாயக்க பிரதேசத்திலுள்ள சாமசர மலையிலிருந்து மண்திட்டுகள்  சரிந்து விழுந்தன. இதனால் மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டன. 

இதுவரைக்கும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இன்றைய தினம் பல்லேபாகே கிராமத்தில் வைத்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சடலமானது மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் வரைக்கும் மண்சரிவினால் அடித்து  செல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று அரநாயக்க மண்சரிவில் சிக்குண்ட சடலங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மீட்பு குழு முழுமையாக நிறுத்தியதாக இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. 

இவ்வாறு  மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட தருவாயிலேயே இன்று ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் அரநாயக்க மண்சரிவினால் 200 க்கும் மேற்பட்டோர் புதையுண்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் தற்போதைக்கு 49 சடலங்களே  மீட்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:38:19
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02