சுயநல தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் மீள் ஏற்றுமதி  உற்பத்திகளுக்கு தடை  : ரமேஷ் பத்திரன 

Published By: R. Kalaichelvan

20 Dec, 2019 | 02:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இடைக்கால அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ,விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

 சுயநல தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட சிறு ஏற்றுமதி உற்பத்திகள் அனைத்தும்  தற்போது தடை செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 

தெங்கு உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக 7  தென்னை உற்பத்தி நிறுவனங்கள்  ஒன்றினைந்து உருவாக்கிய செயற்திட்ட கொள்கையினை  கையளிக்கும் நிகழ்வு இன்று பெருந்தோட்ட அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 தேசிய உற்பத்திகளை  மேம்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தென்னை, தேயிலை, இறப்பர் ஆகிய  உற்பத்திகள் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு செய்கின்றன.  இந்த மூன்று பிரதான உற்பத்திகளையும் வலுப்படுத்துவதற்கான   செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கையளிக்கப்பட்டுள்ள செயற்திட்ட கொள்கை தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தும்.கடந்த அரசாங்கத்தில் இறக்குமதி உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தேசிய உற்பத்திகள்  இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதன் காரணமாக விவசாயிகள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

தேசிய உற்பத்திகளுக்கு  பாரிய சவாலாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்படும் சிறுஏற்றுமதி உற்பத்திகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு. உள்ளுர் உற்பத்தியாளர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஒரு தரப்பினரது சுயநல தேவைகளுக்காக உள்ளுர் உற்பத்திகள்  இல்லாதொழிக்கப்பட்டன. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இனி இடம் கிடையாது. எமது நாட்டின்  உற்பத்திகள் சர்வதேசத்தின் மத்தியில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51