உணவு இடைவேளையின் முன் 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டத்துடன் இலங்கை

Published By: Vishnu

20 Dec, 2019 | 01:54 PM
image

(பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் முதலாவது ஆட்ட நேரப் பகுதியில 3 விக்கெட்களை இழந்தமை இலங்கை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

பகல்போசன இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதமிருக்க பாகிஸ்தானைவிட 21 ஓட்டங்களால் மாத்திரமே இலங்கை பின்னிலையில் இருக்கின்றது.

இப் போட்டியில் நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்ளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை, துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தது. 7 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இராக்காப்பாளன் லசித் எம்புல்தெனிய, அநாவசியமாக மொஹமத் அபாஸின் பந்தை விசுக்கி அடிக்க விளைந்து அஸாத் ஷபிக்கிடம் பிடிகொடுத்து 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் ஏஞ்சலே மெத்யூஸும் 13 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சைப் புரிந்துகொள்ள முடியாமல் விக்கெட் காப்பாளர் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து நடையைக் கட்டினார்.

தொடர்ந்த தினேஷ் சந்திமாலும் தனஞ்சய டி சில்வாவும் திறமையாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை சிரமமின்றி பெற்றவண்ணம் இருந்தனர்.

இருவரும் 6ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்;ந்திருந்தபோது ஷஹின் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் மொஹமத் அபாஸிடம் பிடிகொடுத்து 32 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் அபாஸ் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49