பிரான்ஸ், ஜேர்மனியில் தொடர்ந்து வௌ்ளப்பெருக்கு ; 11 பேர் பலி

Published By: Raam

03 Jun, 2016 | 05:22 PM
image

பிரான்ஸின் பாரிஸ் நகரில்  செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19  அடி வரை உயர்ந்ததால் அந்நகரில் பல பிராந்தியங்களில்  வரலாறு காணாத  பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வௌ்ள அனர்த்தம் காரணமாக பாரிஸ் நகரிலுள்ள  உலகப் பிரபல  லோவுர் அருங்காட்சியம் மற்றும்  ஒர்சே அருங்காட்சியம் என்பன மூடப்பட்டு அவற்றின் கீழ் மாடிகளிலிருந்த  விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள்  மேல் மாடிகளுக்கு  கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தம் காரணமாக  பிரான்ஸிலும்  ஜேர்மனியிலும் குறைந்தது 11  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய ஐரோப்பாவில் மேலும் கடும் மழைவீழ்ச்சி இடம்பெறலாம் என எதிர்வுகூறப்படுகின்ற நிலையில் வெள்ளம் இன்னும் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.

தென் ஜேர்மனியிலுள்ள  பல நகர்களும், பெல்ஜியமும் போலந்தும்   இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில்  அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மத்திய பாரிஸில் சியன் ஆற்றங்கரையோரமாக அமைந்த  புகையிரதப்பாதை மூடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மட்டும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 9  பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல்போயுள்ளனர்.

பவேரியா பிராந்தியத்தில் சிம்பச் எனும் இடத்திலுள்ள வீடொன்றின் கீழ் தளத்தில்  78  வயது பெண்ணொருவரும் அவரது 56  வயதுடைய மகளும் 28  வயதான பேத்தியும்  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் 75  வயது ஆணொருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.  அதேசமயம் அதன் அயல் கிராமமான ஜுல்பச்சில் 80  வயது பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல் தெரிவிக்கையில், இந்த வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக முழு நாடும் துக்கம் அனுஷ்டிப்பதாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08