சுவிஸ் தூதரக ஊழியரிடம் சிறையில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Published By: Vishnu

19 Dec, 2019 | 08:43 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் உழியரான கானியா பனிஸ்ட பிரான்சிஸிசிடம் சிறையில் வைத்து மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்ய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று சி.ஐ.டி.க்கு அனுமதி வழ்னக்கினார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று மாலை கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இதற்கான அனுமதியளிக்கப்பட்டது.

இதன்போது சுவிஸ் தூதரக அதிகாரி விடயத்தில் சி.ஐ.டி.யினரால் சேகரிக்கப்பட்டுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த இரசாயன பகுப்பயவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கவும் இதன்போது நீதிவனால் சி.ஐ.டி.க்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதனிடையே சுவிஸ் தூதரக அதிகாரி  கானியா பெனிஸ்ட பிரான்சிஸ்  தற்போது  விளக்கமறியலில் உள்ள நிலையில், இன்று காலை 9.00 மணிக்கு அங்கொட  தேசிய உளவியல் நிறுவனத்தின்  உள சார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில்  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.  

இதன்போது  மன நலம் தொடர்பில் பரிசோதனைச் செய்ய  கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோனால் நியமிக்கப்பட்ட   உளவள வைத்திய நிபுணர்களால் விஷேட பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனைவிட சுவிஸ் தூதரக  அதிகாரி கானியா தடுத்து வைக்கப்பட்டுள்ள,  விளக்கமறியல் சிறையில் பெண்கள் பகுதியின் வை பகுதியில்  விஷேட தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. 

கானியவிடம் தொலைபேசி உள்ளதாக சிறைச்சாலை உளவுத் துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த தேடுதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில், அதன்போது, ஒரு தொலைபேசியும் 5 சிம் அட்டைகளும் குறித்த பெண்கள் விளக்கமறியலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

அவற்றை சி.ஐ.டி.யினரிடம் மேலதிக விசாரணைக்கு கையளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08