மாணவர்கள் இருவரை காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

Published By: MD.Lucias

03 Jun, 2016 | 04:16 PM
image

திருகோணமலை, குச்சவெளி மற்றும் கிண்ணியாப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது முப்ரிஸ் (வயது 15) ஆகிய இரு மாணவர்களும் கடந்த 31ஆம் திகதியில் இருந்து காணவில்லை என நேற்று மாலை கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு மாணவர்களும் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் உள்ள அரபுக் கல்லூரியொன்றில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி கற்று வருபவர்கள் எனவும் கடந்த 31ஆம் திகதியில் இருந்து இன்று வரை இவர்கள் வீட்டிற்கும் வரவில்லை எனவும் கல்லூரியிலும் இல்லை என்ற விடயமும் தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து இரு மாணர்களின் பெற்றார்கள் கருத்துத் தெரிவிக்கையில், மே மாதம் 31ஆம் திகதி இரவு அரபுக் கல்லூரியின் அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் உங்களது பிள்ளைகள் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர்கள் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பி வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 அந்த நேரத்தில் இருந்து இரண்டு நாளாக எங்கும் தேடினோம். இருந்தும் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. இதன்காரணமாக இன்று கல்லூரி அதிபர் உடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

மாணவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகத் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இம்மாணவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 026-2236222 எனும் இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கிண்ணியாப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17