இந்தியாவின் முதலாவது இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக 22 வயது இளைஞர் தெரிவு!

19 Dec, 2019 | 03:09 PM
image

இந்தியாவின் முதலாவது இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் பாலன்புரின் கனோடர் கிராமத்தை சேர்ந்தவர் ஹசன் சபீன். வருமையான குடும்பப் பின்னணியை கொண்டிருந்த இவர் சிறுவயது முதல் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதே தனது இலட்சியமாக கொண்டு செயற்பட்டுள்ளார். இவரது இலட்சியத்திற்கு வறுமை தடையாக இருந்த போதும், தாய் மற்றும் அயலவர்களின் உதவியுடன் சாதனை படைத்துள்ளார் ஹசன் சபீன்.

மகனின் படிப்பிற்கு உதவும் வகையில், அவரது தாயார் உணவகங்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்து வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சபீன் படிக்க உதவி செய்துள்ளனர்.

முதல்முறையாக சிவில் சேவையாளர் தேர்வு எழுத சென்றபோது ஹசன் விபத்தில் சிக்கிய நிலையில் தேர்வு எழுதியுள்ளார்.  அதில் வெற்றி பெற முடியாது போனதையடுத்து, 2ஆவது முறையாக தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியாகி தமது இலச்சியத்தை நனவாக்கியுள்ளார். 

கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 570ஆவது இடத்தை பெற்ற சபீன் ஐ.பி.எஸ்.ஆக தெரிவாகியுள்ளார். 

 இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி  ஜாம்நகர் பொலிஸ் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற பெருமையை சபீன் பெற்றுள்ளார்.

தமது வெற்றி குறித்து சபீன் கூறுகையில், 

‘இந்த வெற்றியை நான் மட்டும் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு தான் எனது வெற்றிக்கு காரணம்’ என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47