(ஜவ்பர்கான்)

கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்படாத நிதியை அடுத்த 2016 ஆம் ஆண்டு கல்விக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய நிதியினை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். 

ஆண் மாணவர்களை விட பெண் மாணவிகளே கல்வியில் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர் எனவும் 60 வீத மாணவிகள் பல்கலைக்கழகததிற்கு செல்கின்றனர் எனவும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப்பாடசாலையின் 85 ஆவது வருட ஆண்டு விழா  நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.