ரேடியன்ட் ஐ ஹொஸ்பிட்டல் இணையத்தளம் அறிமுகம்

Published By: Priyatharshan

03 Jun, 2016 | 03:55 PM
image

த ரேடியன்ட்  ஐ ஹொஸ்பிட்டலின் இணையத்தளமான radianteye.lk உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

 

இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை நிபுணர்கள், பங்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் ஸ்தாபகர் வைத்தியர்  ஷமிந்த அமரதுங்க வைத்தியசாலை அணிக்கு தலைமைத்துவத்தை வழங்குவதுடன் இவர் ஒரு கண் சத்திரசிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்கள் பராமரிப்புத் துறையில் தமக்கென கீர்த்தி நாமத்தை இவர் கட்டியெழுப்பியுள்ளார். வைத்தியர் அமரதுங்க இதுவரை 120,000 க்கும் அதிகமான சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 

குறைந்த வசதிகள் படைத்தோருக்கு இலவசமாக விழிவெண்டபல சீராக்கல் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதில் இவர் புகழ்பெற்றவராவார். 

இந்த இணையத்தள அறிமுகத்தை முன்னிட்டு கண் பரிசோதனை முகாமொன்றை முன்னெடுத்திருந்ததுடன் 25 விழிவெண்படல சத்திரசிகிச்சைகளை இலவசமாக வைத்தியர் அமரதுங்க மேற்கொண்டிருந்தார்.

கண்கள் பராமரிப்பு பிரிவின் பொறுப்பு என்பது நோயாளரின் பார்வையை மேம்படுத்துவதற்கு சிறந்த முறைகளை பின்பற்றுவது என்பதுடன் அந்த தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.

இந்தச் செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று நோயாளர்களின் வாழ்க்கையை மெருகேற்றம் செய்யும் வகையில் மிகச் சிறந்த நோயாளர் பராமரிப்பை வழங்குவதுடன் அவர்களை ஊக்குவித்து மற்றும் வழிகாட்ட ரேடியன்ட் ஐ முன்வந்துள்ளது. 

நோயாளர்களின் வாழ்க்கையில் “பார்வையில் மாற்றம்” என்பதை ஏற்படுத்த ரேடியன்ட் ஐ நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பார்வையை மீள பெற்றுக் கொடுக்க முடியாதவர்களுக்கும் இந்த நிலையை ஏற்படுத்த முயன்று வருகிறது. கண்கள் தொடர்பான சகல சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொடுக்கக்கூடிய பகுதியாக வைத்தியசாலை அமைந்துள்ளது. நட்புறவான சேவையுடன் அதீத ஈடுபாடு மற்றும் மனிதநேயத்துடன் சேவைகளை வழங்கி வருகிறது.

வைத்தியசாலையின் வசதிகளை கவனத்தில் அதன் நோயாளர்களின் கொள்ளும் போது சௌகர்யம் மற்றும் வசதி போன்றவற்றுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது. நோயாளர்களுக்கு சிறந்த ஓய்வான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் ஹோட்டல் மற்றும் ரிசோர்ட் ஒன்றின் வடிவமைப்பை இந்த வைத்தியசாலையில் நிறுவியுள்ளதன் மூலம் “பார்வையில் மாற்றம்” என்பதை உறுதி செய்கிறது. 

இந்த வைத்தியசாலை கொழும்பு மற்றும் நீர்கொழும்புக்கிடையில் தண்டுகம பகுதியில் அதிக வேக நெடுஞ்சாலையை அண்மித்து அமைந்துள்ளது. பெருமளவு வாகனத் தரிப்பிட வசதிகளைக் கொண்டுள்ளதுடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோரை கவரும் வகையில் சிறந்த வர்ணங்களை கொண்டதாக இந்த வைத்தியசாலை அமைந்துள்ளது.

த ரேடியன்ட் ஐ ஹொஸ்பிட்டல், நவீன தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில், IOLMaster, Electro physiological studies for ERG போன்றன சிலவாகும். 

சத்திரசிகிச்சை கூடம் என்பது பொறியியல் ரீதியில் அதிகளவு புத்தம் புதிய வசதிகளை நுணுக்கமான முறையில் உள்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் அடங்கியுள்ள சாதனங்கள், சீரான வளி அழுத்தத்தை பேணல், copper Lamina Flow air -ltration system, சுவர்கள் மற்றும் நிலத்துக்கு பக்றீரியா பரவாத மேற்பொருட்கள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. தொற்றுக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உயர் மட்ட தர நியமங்களை ரேடியன்ட் ஐ பின்பற்றி வருகிறது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இந்த விடயம் குறித்து சுகாதாரத்துறை கவனயீனமாக செயற்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான கடுமையான விதிமுறைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், AAMI (Association for the Advancement of Medical Instrumentation) அடிப்படையிலும் infection control manuals by Sri Lanka College of Microbiologists மூலமாகவும் இந்த விடயம் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகிறது. எளிமையான கட்டமைப்பு மற்றும் பொது மக்களுக்கு இலகுவில் பயன்படுத்தக்கூடிய வகையில் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷமிந்த அமரதுங்கவின் வழிகாட்டலில், தொழில்நுட்ப ரீதியில் சிக்கலான கட்டமைப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இணையத்தள வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள பிந்திய செயற்பாடுகளைக் கொண்டு இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவூட்டலை வழங்கவும் இந்த இணையத்தளம் பயன்படுத்தப்படும்.

வைத்தியர். அமரதுங்க நிபுணர்களுக்கும், நோயாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய அறிவு நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளார். 

“தற்போது எமது முழுக்கவனமும் வெவ்வேறு வருமானமீட்டும் பிரிவினருக்கு சகல வசதிகளையும் படைத்த கண்கள் பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டார். 

இந்த அறிமுக நிகழ்வில், 15 வருடங்களுக்கு பின்னர் கண் பார்வையை மீளப் பெற்ற நோயாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வைத்தியர். அமரதுங்க மற்றும் அவரின் அணியினர் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18