சம்பிக்கவின் விளக்கமறியல் நீடிப்பு 

Published By: R. Kalaichelvan

19 Dec, 2019 | 08:58 PM
image

வாகன விபத்தொன்றினை அடுத்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறித்து சாட்சியங்களை சோடித்து  நீதித் துறைக்கு மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

இன்று இது குறித்த விவகாரம் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்ட்டது.  

எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழ்னக்குவதா அல்லது விளக்கமறியலை நீடிப்பதா என முடிவு எடுக்கப்படும் என  மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா இதன்போது அறிவித்தார்.

இது குறித்த விவகார வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்ட போது, விசாரணையாளர்களான கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில்  அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா, பிரதான பொலிஸ் பரிசோதகர்களான பெர்னாண்டோ மற்றும் என்ஸ்டன் சில்வா ஆகியோர் மன்றில் ஆஜராகினர். 

அவர்களுக்கு வலு சேர்க்க சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் சிரேஷ்ட அரச சட்டவாதி சஹன்யா நரம்பனாவ ஆகியோரும் ஆஜரகைனர்.

சந்தேக நபர் சம்பிக்க ரணவக்க இன்று சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்ப்ட்ட நிலையில், அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் கீழ் சிரேஷ்ட அரச சட்டவாதிகளான அஜித் பத்திரண , குணரத்ன வன்னிநாயக்க ஆகியோரின் கீழான சட்டத்தரனிகள் குழுவொன்று ஆஜராகியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49