மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

19 Dec, 2019 | 11:34 AM
image

மஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் ஆளனி பற்றாக்குறை மற்றும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 19ஆம் திகதியன்று  வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது , இந்த மாவட்ட வைத்தியசாலையை அடிப்படையாகக் கொண்டு சுமார் 64000 மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஆகையால் தற்போது இவ்வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை, ஆளனி பற்றாக்குறை மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளில் பற்றாக்குறை நிலவுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தனர்.

மேலும், மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் காணப்படும் சுகாதார,போசனை மற்றும் சுதேச  வைத்தியர் காரியாலயத்தை இவ்வைத்தியசாலையுடன் இணைக்கும் போது வைத்தியர் பற்றாக்குறையையும் தாதியர் பற்றாக்குறையையும் தவிர்க்க முடியும்,

என்றும் இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் ஏற்படும் இடப்பற்றாக்குறைகளைத் தவிர்க்க முடியும் என்றும் இப்பிரதேசத்திலிருந்து மாதாந்த சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளர்களுக்கு மிக இலகுவாகவும் அமையும் என்றும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்