கண்டியில் நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து கண்டி - டீ.எஸ் சேனாநாயக்க வீதி மற்றும் கொழும்பு வீதிகள் இணையும் சந்தியில் இடம் பெற்றுள்ளது.

அதிக வேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியின் பின்னால் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த 24 வயதுடைய மற்றைய இளைஞர் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.