புதிய களனி பாலம் நிர்மாணம்: இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Published By: Digital Desk 3

19 Dec, 2019 | 10:28 AM
image

புதிய களனி பாலம் கட்டப்படுவதால், இன்று முதல் அடுத்த மாதம் ஜனவரி 20 ஆம் திகதி வரை கொழும்பு நகர எல்லைக்குள்ளும் வெளியேயும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரே ஒரு பாதை மட்டுமே திறக்கப்படும்.

கடவத்தையிலிருந்து கொழும்புக்குள் நுழையும் அனைத்து கனரக வாகனங்கள், லொரிகள் மற்றும் கொள்கலன் லொரிகள் கடவத்தை மாற்றுவழியை பயன்படுத்தி கெரவளப்பிட்டியை நோக்கி பயணிக்க வேண்டும்.

வாகன சாரதிகள் பின்னர் பேலியகொட வழியாக கொழும்பு-புத்தளம் வீதியில் நுழைந்து நவலோக்க சுற்றுவட்டத்தை அடைய வேண்டும், வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் மூலம் ஜப்பான் நட்பு வீதியில் கொழும்பு துறைமுக நுழைவு வீதிக்கு செல்லலாம் அல்லது சுகததாச ஸ்டேடியம் வீதியைப் பயன்படுத்தி கொட்டஹென மற்றும் கொழும்பு கோட்டையை அடையலாம். 

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட வாகனங்கள், வத்தளையிலிருந்து கொழும்பு-புத்தளம் வீதியைப் பயன்படுத்த வேண்டும், அத்தோடு மகர அல்லது கிரிபத்கொடையிலிருந்து வீதியைப் பயன்படுத்தலாம் என்று களனி பாலத் திட்டத்தின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இந்த வாகனங்கள் ஜப்பான் நட்பு பாலம் வழியாக கொழும்பு நகர எல்லைக்குள் செல்லலாம்.

கிரிபத்கொடைவிலிருந்து கொழும்பிற்குள் நுழைய விரும்பும் வாகன சாரதிகள் வேதமுல்லை சுற்றுவட்டத்தை பயன்படுத்தி, வலது திருப்பத்தை எடுத்து, கொழும்பு-கட்டுநாயக்க நுழைவு வீதியைப் பயன்படுத்தி, கொழும்பு-புத்தளம் வீதியை அடைந்து நகரத்திற்குச் செல்ல வேண்டும்.

பொரல்லைவை அடைய களனி பாலம், ஒருகொடவத்தை மற்றும் பேஸ்லைன் வீதியைப் பயன்படுத்தும் அனைத்து பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் வெதமுல்லை சுற்றுவட்டத்தில் செல்ல வேண்டும், கொழும்பு-கட்டுநாயக்க வீதி, பேலிகொடைக்கு வலதுபுறம் திரும்பி, புதிய களனி பாலத்தைப் பயன்படுத்தி பேஸ்லைன் வீதியை அடைந்து தெமடகொடை மற்றும் பொரல்லைக்கு செல்லலாம்.

பண்டிகை காலங்களில் கொழும்புக்குள் நுழையும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58