எனது தந்தையின் கையிலிருப்பது வசியக்கோல் அல்ல, அது உடலில் ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்த பயன் படுத்தும் ஒருவகை பொருளென மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மைகயில் தொலைக்காட்சி நிகழ்சியியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருகாலத்தில் மஹிந்த ராஜபக்கஷ என்ற பாத்திரத்திற்கு சேறுபூசும் செயல்களில் ஈடுபடுவதற்காக அவர் அணிந்திருந்த உடை, கையில் வைத்திருந்த பொருள், தலை சீவும் முறை முதல் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வரும் போது இருந்தவர்களே இன்று அவருக்கெதிராக சேறுபூசும் செயலில் ஈடுபடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்றும் மக்கள் ஆதரவளிக்கின்றனர்.  அன்று மக்களிடமிருந்த அன்பும் பாசமும் தற்போதும் அவருக்குள்ளது.

தாய்லாந்தில் பெரும்பான்மையான துறவிகள் அந்தப்பொருளை  பாவித்து வருகின்றனர்.  அதனை வைத்திருப்பதால் கை நரம்புகளின் தொழிற்பாடுகள் மற்றும் அழுத்தங்கள் குறையும் என நம்புகின்றனர்.

ஒரு காலத்தில் நானும் அதனை வைத்திருந்தேன். அதனை சிலர் வசியக்கூடு எனத் தெரிவித்தனர். அதனால் நான் அதனை ஒருபக்கமாக வைத்துவிட்டேன். இதுவே உண்மையான கதையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.