சட்ட விரோதமாகவே என்னை கைதுசெய்துள்ளனர் - சம்பிக்க

Published By: Vishnu

18 Dec, 2019 | 08:46 PM
image

(நா.தனுஜா)

சபாநாயகருக்கும் நீதிவானுக்கும் அறிவிக்காமல் சட்ட விரோதமாக வீட்டினுள் நுழைந்தே கொழும்பு பிரிவினர் தன்னை கைதுசெய்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

இன்று மாலை சட்ட மா அதிபரால் முன்னாள் அமைச்சர் சம்பிகவை கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

சம்பிக ரணவகவை கைது செய்வதற்காக பொலிஸார் அவருடைய இல்லத்திற்குள் உள்நுழைந்த நிலையில், உடனடியாகவே இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு சம்பிக்க ரணவக அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடி காணொளியொன்றைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

நான் தேரர்களைச் சந்தித்துவிட்டு எனது இல்லத்திற்கு வந்தேன். அப்போது குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் என்னுடைய இல்லத்திற்குள் நுழைந்ததுடன், என்னைக் கைது செய்வதற்கான உத்தரவு இருப்பதாகக் கூறினார்கள். பாராளுமன்றத்திற்கு அறிவித்திருக்கிறார்களா என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை. அதன் பின்னரே பிரதி சபாநாயகரிடம் பேசினார்கள். நந்தன என்பவரே இவ்வாறு பிரதி சபாநாயகரிடம் பேசினார். 

நீதவானுக்கும் இது தொடர்பில் அறிவிக்காமலேயே இந்த அதிகாரிகள் வீட்டினுள் நுழைந்தார்கள். வீட்டில் நுழைந்த பின்னரே சபாநாயகருக்கும் நீதவானுக்கும் அறிவித்தார்கள். இது சட்ட விரோத செயலாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30