சுவிஸ் தூதரக ஊழியரின் மன நிலை பரிசோதனைக்காக மூவர் கொண்ட குழு நியமனம்!

Published By: Vishnu

18 Dec, 2019 | 08:39 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கானியா பனிஸ்ட பிரான்சிஸின் மன நலம் தொடர்பில் பரிசோதனைச் செய்ய மூவர் கொண்ட விஷேட நிபுணர்கள் குழுவை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் நியமித்துள்ளார்.

விஷேட வைத்திய நிபுணர்களான லூஷான் ஹெட்டி ஆரச்சி,  கபில ரணசிங்க மற்றும் புஷ்பா டி சில்வா ஆகிய வைத்திய நிபுனர்களைக் கொண்ட குழுவே இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கானியா பெனிஸ்ட பிரான்சிஸ் தற்போது  விளக்கமறியலில் உள்ள நிலையில், நாளை முற்பகல் 9.00 மணிக்கு அங்கொட தேசிய உளவியல் நிறுவனத்தின் உள சார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்