பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு

Published By: Daya

18 Dec, 2019 | 03:09 PM
image

மன்னாரில் நத்தார், புது வருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற் கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கேள்விப்பத்திர அடிப்படையில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க மன்னார் நகர சபையினால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 301 தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வர்த்தகர்களிடம் மன்னார் நகரசபையினால் வியாபார நிலையங்களைப் பெற்றுக்கொள்ளக் கேள்விப்பத்திர அடிப்படையில் விண்ணப்பம் கோரப்பட்டது.

அதற்கமைவாக வியாபார நிலையங்களைப் பெற்றுக்கொள்ளப் பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் விண்ணப்பித்திருந்தனர்.டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து கேள்வி படிவங்கள் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் , நகர சபையின் உறுப்பினர்கள், பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒரு வியாபார நிலையத்தைப் பெற்றுக்கொள்ள ஆகக்கூடிய கேள்வித் தொகைக்கு விண்ணப்பித்த வர்த்தகருக்குக் குறித்த வியாபார நிலையம் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது விண்ணப்பித்திருந்த பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்களும் வருகை தந்திருந்தனர். மன்னார் நகர சபையினால் ஆரம்பத்தொகையாக 15 ஆயிரம் ரூபா கோரப்பட்ட போதும் ஆகக்கூடிய தொகையாக சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை விண்ணப்பித்துள்ளனர். பண்டிகைக் காலத்திற்கான தற்காலிக இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை அமைத்து எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 

வியாபார நிலையங்களைப் பெற்றுக்கொள்ளுவோர் பிரிதொரு நபருக்கு வியாபார நிலைய இடங்களைக் கைமாற்றும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதோடு,குறித்த இடம் நகர சபையினால் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33