அவுஸ்ரேலியாவில் கடல் அலை சறுக்கல் விளையாடில் ஈடுப்பட்ட ஒருவரின் காலை இராட்சத சுறா ஒன்று கடித்து துண்டாக்கியது. 

அவுஸ்ரேலியாவில் பேர்த் அருகே உள்ள பல்கன் கடலில் நேற்று முன்தினம் பென் ஜேரிங் கடல் அலையில் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

பல்கன் கடல் பகுதியானது இராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அப்போது அங்கு வந்த இராட்சத சுறா ஒன்று அவரது காலை  முழங்காலுக்கு கீழே கடித்ததால் அவரது கால் துண்டானது. அங்கு இருந்தவர்கள் பென் ஜேரிங்கை பத்திரமாக கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். 

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.