தடை உத்தரவு ஒரு சிலரினால் மீறப்படுகின்றது - மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

18 Dec, 2019 | 12:10 PM
image

சிவனொளிபாதமலையை புனித பூமியாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பிளாஸ்டிக்,பொலுத்தீன் மற்றும் போதைப்பொருட்கள் பாவனைத் தடை செய்துள்ளபோதும் குறித்த பகுதியில் அதிகளவில் பாவனையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், நல்லத்தண்ணி நகர் மற்றும் மலைப் பகுதியில் வெற்றிலை மற்றும் சிகரட் விற்பனைக்குத் தடை செய்துள்ளபோதும் ஒரு சிலர் மிகவும் சூட்சமமான முறையில் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இவர்களினால் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் சிகரட் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் இவர்கள் நாள் தோறும் மலை உச்சிக்குக் கொண்டு சென்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் நுவரெலியா மாவட்ட அரச அதிபரினால் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இப்போது இக்கட்டளை மீறப்படுவதுடன் இவ்விற்பனையை மேலும் சிலர் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ஆகவே ஜனவரி மாதத்தில் அதிகளவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்திரியர்களின் வருகைக்கு முன்னர் இவ்விற்பனையை உடன் உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு முற்றாகத் தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27