துருக்கியில் பழைமையான மசூதி  இடமாற்றம்

Published By: Daya

18 Dec, 2019 | 11:19 AM
image

ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழைமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 2½ கி.மீ. தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாச்சார பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் தெற்கு பகுதியில் பாட்மான் மாகாணத்திலுள்ள பழைமையான நகரம் ஹசன்கீப். இங்கு அந்த நாட்டின் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள் ஏராளமாக உள்ளன.

இந்நிலையில் ஹசன்கீப் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் டைக்ரிஸ் ஆற்றிலிருந்து லிசு அணைக்குத் தண்ணீர் திருப்பிவிடப்படும்.

அப்படி தண்ணீரைத் திருப்பிவிடும்போது, ஹசன்கீப் நகரிலுள்ள கட்டடங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தும் படிப்படியாக அருகிலுள்ள பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.

அந்த வகையில் ஹசன்கீப் நகரில் உள்ள 609 ஆண்டுகள் பழைமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனம் மூலம் 2½ கி.மீ. தொலைவிலுள்ள ஹசன்கீப் கலாச்சார பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1,700 தொன் எடை கொண்ட எரி ரிஸ்க் மசூதியின் மேல் பகுதி தனியாகவும், கீழ்ப் பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டு 2 தனித்தனி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாக ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17