இங்கிலாந்து மொடல் அழகியின் மாளிகையில் கொள்ளை

Published By: Daya

18 Dec, 2019 | 10:58 AM
image

இங்கிலாந்தில் மொடல் அழகி தமரா மாளிகையில் நுழைந்த மர்ம நபர்கள் 470 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ‘பார்முலா 1’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் மகள்  35 வயதான தமரா எக்லெஸ்டோன் . இவர் பிரபல மொடல் அழகி. 

குறித்த பெண்ணுக்கு லண்டனின் கென்சிங்டன் நகரில் 55 அறைகளைக் கொண்ட ஆடம்பர சொகுசு மாளிகை உள்ளது. இந்நிலையில், அவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

தமரா எக்லெஸ்டோன் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்லாந்து நாட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில், இதனை அறிந்த கொள்ளையர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தமரா எக்லெஸ்டோனின் மாளிகைக்குள் புகுந்து, அவரது படுக்கையறையிலிருந்து சுமார் 50 மில்லியன் பவுண்  மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். தனது மாளிகையில் நகைகள் கொள்ளைபோனது தொடர்பாக மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமரா எக்லெஸ்டோனின் இந்த மாளிகையானது 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும். மேலும் மாளிகை அமைந்துள்ள வீதியில் பொலிஸார் இரவும், பகலும் சுற்றிவளைப்பு  பணியில் ஈடுபடுவதோடு, அங்குப் பல சோதனை சாவடிகளும் நிறைந்துள்ளன. ஆனால் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி கொள்ளையர்கள் மாளிகைக்குள் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47