துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: 181 பேர் கைது!

Published By: Daya

18 Dec, 2019 | 10:08 AM
image

துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், 10 வைத்தியர்கள்  உட்பட 18 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்காக, அவர்களையும் பொலிஸார், காவலில் அழைத்துச் சென்றனர். இதனை அந்நாட்டு நீதித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான கிளர்ச்சியாளர்கள் குழு முயற்சி செய்தது.

எனினும், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தனர். இதன்போது நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் உயிரிழ்ந்ததோடு, இந்த திட்டத்தை தீட்டிய 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இராணுவ புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், பொலிஸார், அரச ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அரச  ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த இராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்-தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசாங்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி துருக்கி அரசிடம் ஒப்படைக்குமாறும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10