சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை - சுமந்திரன் 

Published By: Digital Desk 4

17 Dec, 2019 | 02:26 PM
image

சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை. ஆனால் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும். என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டது சரி என்பது தெளிவாகின்றது. அவருக்கு ஆதரவு தெரிவித்த டக்ளஸ் தேவானந்த உள்ளிட்டோர் முகத்தை எங்கே வைக்க போகிறார்கள். இனியும் அமைச்சரவையில் இருப்பதா என்பதனை அவர் யோசிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்ததும் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வாக்குறுதி வழங்கியே அவர்களின். ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை.  தற்போது அவரது தம்பி ஜனாதிபதியான நிலையில் அதிகார பகிர்வு வழங்க முடியாது என கூறியுள்ளார்.

பெரும்பான்மையினர் ஏற்காத எதனையும் செய்ய முடியாது என சொல்கின்றார். நாட்டின் அதிகாரம் ஒரே இடத்தில். இருந்தால் அது பெரும்பான்மையானவர்களுக்கே நன்மை. அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

சிறுபான்மையினரை அடக்கியாள ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அதேவேளை எம்மை அடக்கியாள முனையும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம். என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02