வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் வீடு வழங்கியிருந்தார் - வவுனியா ஒருங்ணைப்பு குழு தலைவர்

Published By: Digital Desk 4

17 Dec, 2019 | 01:31 PM
image

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 17.12 ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றபோதே அவர் தனது ஆரம்ப உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது. 

ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. 

இங்கு வாழும் மூவின மக்களுக்கும் சமமாக வளங்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். 

தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் ஒரே மாத்திரியான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாயவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி ரிசாட் பல வேலைகளை செய்திருந்தார். 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது தொடர்பில் கதைக்கமாட்டார்கள். 

ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடு கொடுத்துள்ளார். காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பேரூந்து நிலையத்திற்கு தீர்வை காணுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இந் நிலையில் பல வேலைத்திட்டங்களை மக்களை அலையவிடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு இணைந்து வேலைத்திடடத்தினை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் எனது தலைமையில் ஒருங்கிணைப்பு குழு இருக்கும் போது அங்கு இருக்க முடியாது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10