பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழிப்பு - ரமேஷ் பத்­தி­ரண

Published By: Daya

17 Dec, 2019 | 12:00 PM
image

(எம்.மனோ­சித்ரா)

பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழி­வுக்­குள்ளாவதை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய வழி­வ­கைகள் குறித்து பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண கவனம் செலுத்­தி­யுள்ளார்.

அமைச்சர் பத்­தி­ரண கடந்த வாரம் தென்னை கைத்­தொ­ழிலை பாது­காக்கும் அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளுடன் தென்னை பயிர்ச்­செய்­கையை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பாக விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யுள்ளார். இந்த கலந்­து­ரை­யா­டலின் போதே இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த கலந்­து­ரை­யாடல் தொடர்பில் அமை ச்சின் ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இந்த கலந்­து­ரை­யா­டலில் தென்னங் கைத்­தொ­ழிலை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் தென்னை கைத்­தொ­ழி­லா­ளர்­க­ளு க்கு அதிக வரு­மா­னத்தை பெற்­றுக்­கொ­டுக் கும் பல்­வேறு நிகழ்ச்­சித்­திட்­டங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டது.

தென்னங் காணிகள் துண்­டா­டப்­படும் சம்­ப­வங்கள் அதி­க­மாக இடம்­பெ­று­வ­தா­கவும் இவ்­வாறு காணிகள் துண்­டா­டு­வதை கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் முன்­மொ­ழி­யப்­பட்­டது.

இது தொடர்­பாக தேயிலை மற்றும் தென் னங் காணி­களை துண்­டா­டு­வதை கட்­டுப்­ப­டுத்தும் சபை­யினால் சட்ட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றும்  அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரன உரிய அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­தி­ருக்­கிறார். அதே­போன்று தற்­போது அனு­ம­தி­யின்றி துண்­டா­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­படும் தென் னங் காணி­க­ளுக்­கான அதி­க­பட்ச வரை­ய­றையை 10 ஏக்­க­ரி­லி­ருந்து 05 ஏக்­கர்­க­ளாக குறைப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­வ­தற்கும் அமைச்சர் தீர்­மா­னித்­துள்ளார்.

பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழி­வுக்­குள்­ளா­வதை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய வழி­வ­கைகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அதற்­காக பயி­ரி­டப்­படும் தென்­னங்­கன்­றுகள் வளரும் வரை முறை­யாக பாது­காப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று தென்னை மரங்­களை வெட்­டு­வதை கட்­டுப்­ப­டுத்தும் சட்­டத்­தையும் உட­ன­டி­யாக திருத்­தவும் தற்­போது அனு­ம­தி­யின்றி வெட்­டு­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ள பலா, ஈரப்­பலா, பனை ஆகிய மரங்­க­ளுடன் தென்னை மரங்­க­ளையும் உள்­ள­டக்­கு­மாறு தென்னங் கைத்­தொ­ழிலை பாது­காக்கும் அமைப்­பினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­னங்­கன்­றுகள் வளரும் பரு­வத்தில் அக்­கன்­று­களை அழித்­து­வரும் சிவப்பு நிற வண்­டு­களின் பிரச்­சி­னையை முற்­றாக ஒழிப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறும் அமைச்­ச­ரினால் அமைச்சின் மேல­திக செய­லா­ள­ருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்ப டாத எண்ணெய்யின் அளவு அதிகரித்துள்ளது. எனினும் சுதேச தென்னை பயிர்ச்செய்கையை பரவலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தென்னைக் கைத் தொழிலை பாதுகாக்கும் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51