Herpes Zoster என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 09:59 PM
image

 இன்றைய திகதியில் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் பலருக்கு திடிரென்று இடது கை கட்டை விரல், மணிக்கட்டு, முழங்கை மூட்டு பகுதி, இடது கை தோள்பட்டை பகுதி என பல பகுதிகளில் வலி ஏற்படும். 

முதுமையின் காரணமாக இத்தகைய வலியை, எலும்பு தேய்மானம் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலியில்லையிது. இதற்கு Herpes Zoster என்று பெயர். இதற்குரிய சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது.

Herpes Zoster என்றால் ஒரு வகையினதான சின்னம்மை என்று குறிப்பிடலாம். சிறிய வயதில் சின்னம்மையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூப்பின் காரணமாக மீண்டும் தாக்குவதே இந்த நோயின் தனித்தன்மை. 

முதுகுப்பக்கத்திலோ அல்லது தலையின் கீழ் பகுதியிலோ சிவந்து காணப்படும். இவை தான் இதன் தொடக்க நிலையிலான அறிகுறி. இவை நரம்புகளின் செயல்பாட்டில் தடை ஏற்படுத்துவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. சிலருக்கு இந்த பாதிப்பு இடது கையில்லாமல் கண்களிலும் ஏற்படக்கூடும். 

அதன் போது பார்வை திறன் குறைபாடு ஏற்படும். தோள் பகுதியில் ஏற்பட்டால் இதயத்தையும் பாதிக்கக்கூடும்.  இதனை கவனியாது விட்டால் கைகளின் செயல்பாட்டையே முடக்கிவிடும். இதற்கு தோல் சிகிச்சை மருத்துவ நிபுணரிடம் காண்பித்து, உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும். 

அதனைத் தொடர்ந்து ஆறு மாதம் முதல் ஒராண்டு காலம் வரை இயன்முறை பயிற்சியை மேற்கொண்டால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

டொக்டர். தீப்தி மோத்திராம்.

தொகுப்பு அனுஷா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04