தீயணைப்பு படையினரின் துரித செயற்பாட்டால் தடுக்கப்பட்ட தீ பரவல் - வவுனியாவில் சம்பவம்

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 07:40 PM
image

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் தீ பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திராவின் வீட்டு சுவாமி அறையில் மின் ஒழுக்கு காரணமாக தீ பற்றியுள்ளது. 

இதனை அவதானித்தவர்கள் உடனடியாக செயற்பட்டதுடன் அயலவர்களுடன் தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டனர்.

இந் நிலையில் இலங்கை மின்சார சபையினர் மற்றும் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினர் துரிதமாக குறித்த பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தீ சுவாமியறையுடன் கட்டுப்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த அறையில் வைக்கப்பட்டிருந்த அலுமாரி மற்றும் சில பொருட்கள் எரிந்துள்ளது.

வவுனியாவில் இவ்வாறான தீவிபத்துக்கள் இடம்பெற்றால் 0242225555 என்னும் துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுவதன் மூலம் இழப்புக்களை குறைத்துக்கொள்ளலாமென நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26