அமெரிக்காவில் இருந்து 6 வருடங்களின் பின் வந்த மருமகளுக்கு மாமியாரின் தண்டனை !

16 Dec, 2019 | 03:33 PM
image

6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை மாமியார் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.

   

இந்தியாவின் மகாராஷ்டிராவில் மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்ற பயத்தில் மருமகளை மாமியார் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாய் நகரின் மாணிக்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி மனே (வயது 48). இவரது மூத்த மகன் ரோகன் மனே தனது மனைவி ரியா மனேவுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6 வருடங்களுக்கு பின்னர் ரோகன் - ரியா தம்பதியினர் கடந்த  முதலாம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தனர். மாமியார் - மருமகள் இடையேயான வழக்கமான சண்டை ஆனந்தி மற்றும் ரியா இடையே அடிக்கடி இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து நேற்றுக் காலை ரோகன் மனே நடைபயிற்சிக்காக காலையிலேயே வெளியே சென்றிருந்தார்.

அப்போது மாமியார் மருமகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மாமியரான ஆனந்தி மனே அங்கிருந்த இரும்பு பூந்தொட்டியை எடுத்து தனது மருமகளை அடித்தார். தலையில் தாக்கப்பட்ட ரியா மனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து ஆனந்தி மனே மாணிக்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ரியா மனேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘ஆனந்தி மனே- ரியா மனே இடையே சில சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளன. தனது மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடமிருந்து ரியா மனே பிரித்து சென்று விடுவார் என்ற எண்ணம் ஆனந்தியிடம் இருந்தது.

மருமகளை கொலை செய்த மாமியாரான ஆனந்தி சில தூக்க மாத்திரைகளையும் உட்கொண்ட நிலையில், வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17