தோட்ட தொழிலாளருக்கு ஏப்ரல் முதல் ரூ. 2500/= இடைக்கால நிவாரண கொடுப்பனவு.!

Published By: Robert

03 Jun, 2016 | 09:50 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2015 ஆம் ஆண்­டு ஏப்ரல் மாதம் முதல் 2500 ரூபா இடைக்­கால நிவாரண கொடுப்­ப­னவை கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடும் வரை வழங்­கு­வதற்கு பிர­தமர் தலை­மையில் நேற்று நடைபெற்ற கூட்­டத்­தில் தீர்­மா­னிக்கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நடை­பெற்ற பொரு­ளா தார முகாமை குழு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்­பட்­டுள்­ளது. இந்தக் கூட்­டத்­தில் பெருந்­தோட்ட தொழிற்­சங்க சம்­மே­ள­னத்தின் சார்­பாக தமிழ் முற்­போக்கு கூட்­டணி

தலைவர் மனோ கணேசன், பிரதி தலை­வர்கள் பழனி திகாம்­பரம், வி. ராதா­கி­ருஷ்ணன் மற்றும் அமைச்­சர்கள் ஜோன் சென­வி­ரத்ன, ரவி கரு­ணா­நா­யக்க, மலிக் சம­ர­விக்­கி­ரம, நவீன் திசா­நா­யக்க திறை­சேரி ஆலோ­சகர் பாஸ்­க­ர­லிங்கம் உட்­பட அரச அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­ட­னர். இந்த சந்­திப்பில் தோட்ட தொழி­லா­ளர்கள் தொடர்­பி­ல் எடுக்­கப்­பட்ட முடி­வுகள் வரு­மாறு

1. 2015 ஏப்ரல் முதல் கணக்­கெ­டுக்­கப்­பட்டு ரூ. 2500/= இடைக்­கால நிவா­ரண கொடுப்­ப­னவு தோட்ட தொழி­லா­ள­ருக்கு, புதிய கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்து ஆகும்­வரை வழங்­கப்­படும்.

2. இதன் மூலம் தோட்ட தொழி­லா­ள­ருக்­கான இன்­றைய நாட்­சம்­பளம் ரூ. 620 உடன் ரூ. 100 மேல­தி­க­மாக சேர்க்­கப்­பட்டு ரூ. 720 நாட்­சம்­பளம் வழங்­கப்­படும்.

3. இந்த மேல­திக தொகையை வழங்க, தோட்ட முகா­மைத்­துவ நிறு­வ­னங்­க­ளுக்கு, அரச வங்­கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்­கப்­படும். இந்த பொறுப்பு திறை­சேரி ஆலோ­சகர் பாஸ்­க­ர­லிங்­கத்­திடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

4. வெகு விரைவில் கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, புதிய தொகை சம்­ப­ளமும், 2015 மார்ச் 31ம் திக­தி­யி­லி­ருந்து கணக்­கெ­டுக்­கப்­பட்டு நிலுவை சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.

5. கூட்டு ஒப்­பந்த தொழிற்­சங்­கங்­களின் பேச்­சு­வார்த்தை நட­வ­டிக்­கையை நேர­டி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­ந­டத்­துவார்.

6. விரைவில் தொழி­லா­ள­ருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறை­மை­யான, வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47