பயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண 

Published By: Vishnu

16 Dec, 2019 | 02:27 PM
image

(எம்.மனோசித்ரா)

பயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிவுக்குள்ளாவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண கவனம் செலுத்தியுள்ளார்.  

அமைச்சர் பத்திரண கடந்த வாரம் தென்னை கைத்தொழிலை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர்களுடன் தென்னை பயிர்ச்செய்கையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். 

இந்த கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று தென்னை மரங்களை வெட்டுவதை கட்டுப்படுத்தும் சட்டத்தையும் உடனடியாக திருத்தவும் தற்போது அனுமதியின்றி வெட்டுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள பலா, ஈரப்பலா, பனை ஆகிய மரங்களுடன் தென்னை மரங்களையும் உள்ளடக்குமாறு தென்னங் கைத்தொழிலை பாதுகாக்கும் அமைப்பினால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

தென்னங்கன்றுகள் வளரும் பருவத்தில் அக்கன்றுகளை அழித்துவரும் சிவப்பு நிற வண்டுகளின் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அமைச்சரினால் அமைச்சின் மேலதிக செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத எண்ணெயின் அளவு அதிகரித்துள்ளது. எனினும் சுதேச தென்னை பயிர்ச்செய்கையை பரவலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தென்னைக் கைத்தொழிலை பாதுகாக்கும் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37