நிலைகுலைந்­துள்ள முஸ்லிம் அர­சியல்

16 Dec, 2019 | 12:30 PM
image

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் முஸ்லிம் அர­சியல் நிலை­கு­ழைந்­துள்­ள­தனைப் போன்­ற­தொரு தோற்­றப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், உயர்­பீட உறுப்­பி­னர்­களும், முக்­கிய ஆத­ர­வா­ளர்­களும் தமது கட்சி அர­சி­யலை முன்­நோக்கிச் செல்­வதில் பாரிய சவால்­களை எதிர் கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

இதே வேளை, முஸ்லிம் கட்­சி­களின் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் நெருக்­க­டிகள் மீண்டும் ஏற்­பட்­டுள்­ளன. முஸ்லிம் அர­சியல் தலை­மை­களை அர­சி­யலில் இருந்து இல்­லாமல் செய்யும் சதித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆதலால், பல குறை­பா­டு­களைக் கொண்­டுள்ள முஸ்லிம் அர­சி­யலை பாது­காத்துக் கொள்ள வேண்­டி­ய­தொரு சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

அர­சியல் தலை­வர்கள்

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ராக செயற்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு, மஹிந்த ராஜ­பக் ஷவை புதிய பிர­த­ம­ராக அறி­வித்தார். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்த அறி­விப்பு நாட்டில் பெரும் அர­சியல் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த குழப்­ப­நிலை 52 நாட்­க­ளாக நீடித்­தது.

மஹிந்த ராஜ­பக் ஷ தரப்­பினர் தமக்கு முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் ஆத­ரவு வழங்­கு­மென்று எதிர்­பார்த்­தனர். அவர்கள் ரவூப் ஹக்கீம் ஆத­ரவு தராது போனாலும், ரிஷாத் பதி­யுதீன் ஆத­ரவு தருவார் என்று நம்­பி­னார்கள். ஆனால், இரு கட்­சி­களும் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை என்­பதில் உறு­தி­யாக இருந்­தன.

இக்­கட்சித் தலை­வர்­களின் இந்த முடிவுதான் அவர்­களின் அர­சியல் இருப்பை கேள்­விக்­கு­றி­யாக்கும்  சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது. அதற்­கு­ரிய திட்­டங்­களும் பின்­னப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின் உச்ச ஆத­ர­வுடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்ற போதிலும், அவர் சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவைப் பெற­வில்லை என்­பது சர்­வ­தேச நாடு­களில் தாக்­கத்தை

ஏற்ப­டுத்­தி­யுள்­ளது. இதேவேளை, முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ரையும் அமைச்­சர்­க­ளாக நிய­மனம் செய்­யாமை கூட விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தப் பின்­ன­ணியில் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தாம் ஆட்சி அமைப்போம் என்று பொது­ஜன பெர­முன நம்­பிக்கை கொண்­டி­ருந்­தாலும், அந்த ஆட்­சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­தி­களும் இடம்­பெற வேண்­டு­மென்­பதில் அக்­கறை கொண்­டுள்­ளார்கள். ஆனால், இதனைச் செய்­வது இல­கு­வான காரி­ய­மாக இருந்­தாலும், பொது­ஜன பெர­முன கடி­ன­மாக்­கி­யுள்­ளது. எக்­கா­ரணம் கொண்டும் ரவூப் ஹக்கீம், ரிஷாத்  பதி­யுதீன் ஆகி­யோர்­களை இணைத்துக் கொள்­வ­தில்லை என்று முடிவு செய்­துள்ள பொது­ஜன பெர­மு­ன­வினர், முஸ்லிம் கட்­சி­களின் இன்­றைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கவர்ந்து கொள்ளும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளார்கள். முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கவர்ந்து, கட்­சி­களின் தலை­மை­களை தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­டங்கள் வகுத்­துள்­ளார்கள். இந்தத் திட்­டத்­திற்கு மேற்­படி இரு கட்­சி­களின் ஒரு சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் துணை போகக் கூடிய வாய்ப்­புக்­களும் உள்­ளன.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த எச்.எம்.எம்.ஹரிஸ், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் ஆகி­யோர்கள் எந்த வேளை­யிலும் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து கொள்­ள­லா­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

ஹரிஸ் ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட கோத்­தா­பய ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஹரிஸை பொறுத்­த­வரை கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் எல்­லைகள் குறித்­தான சர்ச்­சையில் கவ­ன­மாக இருக்­கின்றார். தாம் ஆளும் தரப்­பாக இல்­லாது போனால் கல்­முனை முஸ்­லிம்­க­ளிடம் இருந்து பறி­போய்­வி­டு­மென்று கரு­து­கின்றார். கல்­மு­னையை பாது­காத்துக் கொள்­வ­தற்கு பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணை­வதே ஒரே வழி என்று சிந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

இதேவேளை, கல்­முனை விவ­கா­ரத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிக அக்­கறை  எடுத்துக் கொள்­ள­வில்லை. ஏனோ­தானோ என்று செயற்­பட்டார் என்­ற­தொரு கருத்­தையும் ஹரிஸ் தமது ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே தெரி­வித்­துள்ளார். கல்­முனை விவ­கா­ரத்தைப் பொறுத்தவரை ஹரிஸ் தனித்­து­வி­டப்­பட்­டுள்ளார் என்­பது உண்­மை­யாகும். முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கல்­முனை விவ­கா­ரத்தில் ஹரி­ஸுடன் இணைந்து கொண்டால், தங்­க­ளுக்கு எத்­தனை வாக்­குகள் கிடைக்கும் என்ற கூட்டல், கழித்தல் சமன்­பாட்­டையே செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஸ்­மாயில், அர­சியல் குழப்பம் ஏற்­பட்ட 52 நாள் கால கட்­டத்தில் மஹிந்த ராஜ­பக் ஷவோடு இணைந்து கொள்­வ­தற்­காக இணக்கம் தெரி­வித்­தவர் என்று பர­வ­லான கருத்து உள்­ளது. அந்த நாட்­களில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் இஸ்­மா­யிலை சல்­லடை போட்டு தேடிய கதை­களும் இருக்­கின்­றன. என்ற போதிலும், மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.பி.திஸா­நா­யக்­க­வுக்கும், இஸ்­மா­யி­லுக்கும் இடையே இன்று வரைக்கும் இறுக்­க­மான உறவு இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. பாரா­ளு­மன்றத் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் இஸ்­மாயில் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டுவார் என்­றுதான் தக­வல்கள் கூறு­கின்­றன. முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இவ­ருடன் அடிக்­கடி பேசிக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவும் மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இணைந்து கொள்­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்­த­தா­கவும் அப்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

இதேவேளை, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்து போட்­டி­யி­டுமா அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டுமா என்­பது குறித்த கதை­களும் இருக்­கின்­றன. கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் முஸ்லிம் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து மூன்று வேட்­பா­ளர்­களை போட்­டி­யிட  செய்து வந்­துள்­ளது. அதே போன்று இம்­மு­றையும் செய்­யுமா என்று பேசப்­ப­டு­கின்­றன. அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் சார்பில் எம்.ஐ.மன்சூர், பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், ஏ.எல்.நசீர் ஆகி­யோர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளார்கள். இவர்கள் நான்கு பேரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்கள். பொத்­துவில் தொகு­தியில் பைசால் காசிம், நசீர் ஆகியோர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளதால், இவர்­களில் ஒரு­வ­ரையே போட்­டி­யிடச் செய்ய வேண்­டி­ய­தொரு நிலைப்­பாட்டில் முஸ்லிம் காங்­கிரஸ் இருக்­கின்­றது. இவர்­களில் ஒரு­வரை தேசி­யப்­பட்­டியல் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக்­கு­வ­தற்கும் யோச­னையும் இருக்­கின்­றது. ஆயினும், அட்­டா­ளைச்­சே­னையை சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் ஒருபோதும் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­ப­தனை நம்பும் நிலை­யி­லில்லை. கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் அட்­டா­ளைச்­சே­னையில் தமது ஆத­ர­வா­ளர்­களை ஒன்று திரட்டி தமது செல்­வாக்கை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு நிரூ­பித்­துள்ளார். இதனால், மூன்று முறை கட்­சியில் போட்­டி­யிட வாய்ப்பு அளிக்­கப்­பட்ட பைசால் காசிம் தேசியப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற நிலைக்கு தள்­ளப்­படும் சூழலும் உள்­ளது. நசீர் மற்றும் பைசால் காசிம் ஆகி­யோர்கள் பொத்­துவில் தொகு­தியை சேர்ந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு நிலை­மைகள் உள்ள போதிலும், அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்கை இழந்து விடக் கூடா­தென்­பதில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கவனம் செலுத்­தி­யுள்ளார். அடிக்­கடி அம்­பாறை மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து கொண்­டி­ருக்­கின்றார். இதனால், அம்­பாறை மாவட்­டத்தில் தனித்து போட்­டி­யிடும் முடி­வினை எடுத்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் சார்பில் எம்.எஸ்.அமீர்­அலி போட்­டி­யி­டுவார். முஸ்லிம் காங்­கி­ரஸில் அலி­சாஹிர் மௌலானா போட்­டி­யி­டுவார் என்று தெரி­கின்­றது. ஆயினும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முத­ல­மைச்சர் நசீர் அஹமட் தானும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­யிடம் கோரிக்கை ஒன்­றினை முன் வைத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நசீர் அஹ­மட்­டிற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வாய்ப்பு வழங்­காது போனால், பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து போட்­டி­யிடும் நிலைப்­பாட்டை அவர் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதேவேளை, கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்றத் தேர்­தலை எந்தக் கட்­சியில் போட்­டி­யி­டு­வது என்­பதில் பலத்த கேள்­விகள் உள்­ளன. ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்றத் தேர்­தலை பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு அதிக விருப்பம் கொண்­டுள்ள போதிலும், பொது­ஜன பெர­முன அவரை இணைத்துக் கொள்ளும் நிலைப்­பாட்­டிலில்லை.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏப்ரல் 21 தாக்­கு­தலும், அத­னோடு ஹிஸ்­புல்லாஹ், ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோர்­களின் பெயர்­க­ளையும் அர­சியல் தேவைக்­காக ஒரு சில அர­சி­யல்­வா­திகள் மேற்­கொண்­டார்கள். அதனால், ஹிஸ்­புல்­லாஹ்வை பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைத்துக் கொள்ளும் போது, தமது பிர­சா­ரத்­திற்கு தடை­யாக அமை­ய­லா­மென்று அக்­கட்சி கரு­து­கின்­றது. அதனால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யில்தான் இணைந்து போட்­டி­யிட வேண்டும். என்­றாலும், இது கூட ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு சாத்­தி­ய­மா­குமோ என்­பதில்  ஐய­முள்­ளது. ஆதலால், எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் ஹிஸ்­புல்­லாஹ்வின் அர­சியல் வர­லாற்றில் புதி­ய­தொரு அனு­ப­வ­மா­கவே இருக்கும் என்று கரு­து­கின்றோம்.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் தற்­போது மூன்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளார்கள். இவர்கள் மூன்று பேரும் தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் சார்பில் போட்­டி­யி­டு­வார்கள்.

சர­ணா­கதி அர­சியல்

முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களை ஓரங்­கட்டி, அவர்­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கவர்ந்து கொள்ளும் நிலைப்­பாட்டின் மூல­மாக முஸ்­லிம்­களின் அர­சி­யலை சர­ணா­க­திக்கு கொண்டு வரு­வ­தற்கு எண்­ணு­கின்­றார்கள். ஏற்­க­னவே, முஸ்லிம் கட்­சிகள் சர­ணா­கதி அர­சி­யலை செய்து கொண்­டி­ருந்­தாலும், ஆட்­சியின் பங்­கா­ளிகள் என்­ற­தொரு நாமம் ஒட்டிக் கொண்­டி­ருந்­தது. அந்த நாமத்தை இல்­லாமல் செய்து, முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்ற அர­சியல் கட்­சி­க­ளையும் அழித்­து­விடும் சதி வெற்­றி­யாக முடி­யு­மென்றால் முஸ்­லிம்­களின் அர­சியல் மிக­மோ­ச­மான சர­ணா­க­தியை அடை­வது என்­பது கடி­ன­மான காரி­ய­மாக இருக்­காது. இந்­நி­லையில் இருந்து  முஸ்லிம் கட்­சி­களை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மாயின் அக்­கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கட்­சி­யோடு இணைந்­தி­ருக்க வேண்டும். தான் போட்­டி­யிட வேண்டும் எனக்கு தேசி­ய ­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர வேண்­டு­மென்ற கோரிக்­கை­களை கைவிட்டு பொது நோக்­கத்தின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், முஸ்லிம் அர­சி­யலை பொறுத்தவரை கடந்த 20 வரு­டங்­க­ளாக ஒரே முகத்­தையே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக்கிக் கொண்­டி­ருப்­பதில் வாக்­கா­ளர்கள் அலுத்துப் போய் உள்­ளார்கள். இந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சமூகம் சார்ந்த விவ­கா­ரங்­களில் அக்­கறை கொள்­ளாது, மண்­கோட்­டா­வுக்கும், வேறு சுய­ந­லன்­க­ளுக்­கா­க­வுமே செயற்­பட்­டார்கள். ஆதலால், புதிய முகங்கள் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டு­மென்று கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் தலை­மை­க­ளிடம் கோரிக்­கை­களை முன் வைத்­துள்­ளார்கள். ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புதிய முகங்­களை அறி­முகம் செய்ய இருப்­ப­தாக அதன் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். வர­வேற்கக் கூடிய இந்த முடி­வினை முஸ்லிம் கட்­சி­களும் எடுக்க வேண்டும். புதிய முகங்­களை தேர்­தலில் அறி­முகம் செய்யும் போதே கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் உற்­சா­க­ம­டை­வார்கள். அது­மட்­டு­மன்றி, முஸ்லிம் கட்­சி­களின் அரை­குறை சர­ணா­கதி அர­சி­யலை இல்­லாமல் செய்து, சமூ­கத்­திற்­காக அர­சி­யலை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு புதிய இரத்தம் பாய்ச்­சப்­பட வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்சி

இதேவேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த பொதுத் தேர்­தலில் முஸ்லிம் கட்­சி­க­ளுடன் இணக்கம் காணப்­பட்­ட­தனைப் போன்று இம்­முறை காண முடி­யாது. முஸ்லிம் கட்­சிகள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மாயின் அவர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியில் உறுப்­பு­ரிமை பெற்றே போட்­டி­யிட வேண்டும். சிறு­கட்­சி­க­ளுக்கு தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் என்­பது கூட தரப்­ப­ட­மாட்­டா­தென்று தெரி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்த நிலைப்­பாடு உண்­மை­யாயின் முஸ்லிம் கட்­சிகள் தனித்தே போட்­டி­யிட வேண்­டிய நிலையும் ஏற்­ப­டலாம். ஆனால், முழு நாட்­டிலும் முஸ்லிம் கட்­சி­க­ளினால் தனித்து போட்­டி­யிட முடி­யுமா என்­ப­துதான்  மிகப் பெரிய சிக்­க­லாகும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் இந்த நிலைப்­பாட்­டினால் முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரு கட்­சி­களும் இணைந்து போட்­டி­யிட முடி­யுமா என்று சிந்­திப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­விரு முஸ்லிம் கட்­சி­களும் இணைந்து போட்­டி­யி­டு­வ­தனை முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஆத­ரவு தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்கள் ஒரு குடையின் கீழ் இணை­வது என்­பது இனிக்கும் செய்­தி­யாக இருந்­தாலும், தென்­னி­லங்­கையில் இந்த ஒற்­று­மையை காட்டி, இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுக்கும் சக்­தி­களின் இன­வாத அர­சி­யலை இல­கு­வாகக் கொண்டு செல்ல முடியும். முஸ்லிம் கட்­சிகள் ஒற்­று­மைப்­பட்­டுள்­ளன. அதனால், சிங்­கள வாக்­கா­ளர்கள் ஒரு கட்­சியின் கீழ் ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று பிர­சாரம் செய்­வார்கள். இத்­த­கை­ய­தொரு பிர­சாரம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மேலும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும் என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும். மேலும், இவ்­விரு முஸ்லிம் கட்­சி­களும் இணையும் போது, குறை­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையே பெற்றுக் கொள்ள முடியும்.

இன­வாதக் கருத்­துக்கள்

இதேவேளை, ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் அமை­தி­ய­டைந்­தி­ருந்த பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் மீளவும் தமது இன­வாதப் பாட்டை பாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனை மீண்டும் விசா­ரிக்க வேண்­டு­மென்று அத்­து­ர­லியே ரத்ன தேரர் உள்­ளிட்ட சிலர் தெரி­வித்­துள்­ளார்கள். அர­சாங்கம் வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனை விசா­ரிப்­ப­தற்கு புதிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. அத்­தோடு, முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்றும் அத்­து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார். இவர்­களின் இந்த முஸ்லிம் விரோத பிரசாரம் பாராளுமன்றத் தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்படும் வரை தொடரும் என்றே எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

இனவாதக் கருத்துக்களின் மூலமாக வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியுமென்றதொரு சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் மூவின அரசியல் தலைவர்களும் இனவாதக் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மைக் கட்சியினர் பெரும்பான்மையின அரசியல்வாதிகளினால் சமூகத்திற்கு ஆபத்து என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்ற உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையினக் கட்சியினர் சிறுபான்மையினரால் பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தல் உள்ளதென்று, பெரும்பான்மையினத்தவர்களின் ஆதரவுடன் சிறுபான்மையினருக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக தங்களை நாட்டுப்பற்றாளர்கள் என்றும், பௌத்த மதத்தின் காவலர்கள் என்றும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த தர்மத்திற்கு மாற்றமாக செயற்படும் யாரையும் பௌத்த மதத்தின் காவலர்கள் என்று அழைக்க முடியாது. மேலும், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிக்காதவர்களை ஒரு போதும் நாட்டுப்பற்றாளர் என்று அடையாளப்படுத்த முடியாது.

அரசியல் இலாபத்திற்காக குறுக்கு வழிகளை கையாள்கின்றவர்கள் திருந்தாத வரை இலங்கையில் இன ஐக்கியம் என்ற ஒன்று  ஏற்படாது. இனவாதிகள் மலிந்ததொரு தேசத்தில் குழப்பங்களும், அமைதியின்மையுமே கோலாட்சி செய்யும். 30 வருட யுத்தத்தில் காணப்பட்ட இனவாதக் கருத்துக்களை விடவும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மிக மோசமான வகையில் இனவாதக் கருத்துக்கள் மலிந்துள்ளதையும், அதற்கு பெரும்பான்மையினர் துணையாக இருப்பதும் இலங்கையின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

- சஹாப்தீன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13