(க.கிஷாந்தன்)

தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 07 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

லிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

 

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 07 பேர் பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.