மட்டு வைத்தியசாலையில் 14 வயது சிறுமி பலி - கைதான தாதிக்கு பிணை

Published By: Digital Desk 4

15 Dec, 2019 | 02:37 PM
image

மட்டு போதனா வைத்தியசாலையில் அதிகளிவல் மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 வது சந்தேகநபரான பெண்தாதி. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபரான பெண்; தாதியரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது  நீதவான் 5 இலட்சம் ரூபா பெறுமதியான  இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உவைஸ் பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு அதிகரித்த மருந்தை வழங்கியதால் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட பெண்தாதியர். மருந்தாளர் மற்றும் நீதிமன்றில் தெரிவான வைத்தியர் உட்பட மூவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் நீதவான் விடுவித்தார் 

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் புற்றுநோய் வெளிநோயாளர் பிரிவின் தாதியருக்கு பொறுப்பாக இருந்த தாதியரை வெள்ளிக்கிழமை பொலிசார் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான  இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவித்து எதிர்வரும் ஜனவரி 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27