முன்னால் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே நுகேகொட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் இன்று சரணடைந்திருந்தார்.

தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் ஆஜரான திலின கமகே பிணைக்கோரியிருந்த நிலையில் இதற்கு அரச தரப்பு சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்த விடயம் தொடர்பிலான தீர்ப்பினை மாலை 6 மணிக்கு வழங்குவதாக அறிவித்திருந்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்குவதாக கூறி உத்தரவிட்டுள்ளார். 

குறித்த யானைக்குட்டியானது கடந்த வருடம் திலின கமகேவின் வீட்டிலிருந்து  வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

திலின கமகே தன்மீதான குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.