இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலையினை அமைச்சரவையில் எடுத்துரைக்க டக்ளஸ்  உறுதி!

Published By: Daya

14 Dec, 2019 | 04:01 PM
image

இடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைப்பதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை சந்தித்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஜனாதிபதி தேர்தலுதக்கான திகதி அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில், வடக்கு கிழக்கைச் சேர்ந்த சுமார் 2500 பேர் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் 7500 பேர் பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

எனினும், குறித்த நியமனங்கள் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்த அனைத்து நியமனங்களும் இடைநிறுத்தப்பட்டன.

தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடாமையினால், தாம் நிர்க்கதி நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக எந்தவொரு விடயத்தையும் ஆணித்தரமாக பேச முடியாமல் இருப்பதாகவும், எனினும் அமைச்சரவையில் குறித்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எடுத்துரைத்து சிறந்த தீர்வினை பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01