உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம்- தன்பேர்க்கிற்கு ஒபாமா மனைவி அறிவுரை

14 Dec, 2019 | 11:43 AM
image

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா  தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  கிரெட்டா தன்பேர்க்கினை  கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார்.

உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார்.

வியட்நாமிற்கான விஜயத்தின் பின்னர் இந்த செய்தியை பதிவு செய்துள்ள அவர் வியட்நாமில் நான் சந்தித்த யுவதிகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்,என குறிப்பிட்டுள்ள அவர் உங்களால் எங்களிற்கு வழங்கக்கூடிய பெருமளவு விடயங்கள் உள்ளன என கிரெட்டாவிற்கு தெரிவித்துள்ளார்.

சந்தேகம் எழுப்புவர்களை   புறக்கணியுங்கள்,மில்லியன் கணக்கானமக்க்ள் உங்களிற்கு பாராட்டுகளை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என கிரெட்டா தன்பேர்க்கிற்காக  தனது செய்தியில் மிச்செலே ஒபாமா தெரிவித்துள்ளார்.

தன்பேர்க்கிற்கு தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பிரச்சினை காணப்படுகின்றது அவர் கோபத்தை தணிக்கவேண்டும்என்ற அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதைதொடர்ந்தே  அமெரிக்காவின் முன்னாள் முதல்பெண்மணி இதனை தெரிவித்துள்ளார்.

தன்பேர்க் தனது நண்பருடன் பழையகால பாணியிலான படத்திற்கு சென்று தனது கோபத்தை தணித்துக்கொள்ளவேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த கருத்தினை தொடர்ந்து கிரெட்டா தன்பேர்க் டுவிட்டரில் தன்னை பற்றிய அறிமுக  குறிப்பை -  தனது கோபத்தை குறைப்பதற்கு பயிற்சிஎடுக்கும், தனது நண்பருடன் பழையகால பாணியிலான திரைப்படத்தினை பார்க்கும் பதின்ம வயது யுவதி என மாற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35