கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தைப் பார்வையிட்ட கருணா அம்மான்

Published By: Daya

14 Dec, 2019 | 11:21 AM
image

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாகப் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை  கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தைப் புனரமைப்புச் செய்யுமாறு  விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதிக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

இதன் போது பஸ் தரப்பிடத்தில் நின்ற பயணிகள் பொதுமக்களுடன் உரையாடிய பின்னர் இலங்கை போக்குவரத்து வீதி நேரக்காப்பாளர் மற்றும் பஸ் நடத்துநர்களிடம் குறைநிறைகளை நேரடியாகக்  கேட்டறிந்து கொண்ட பின்னர் அங்குத் தனது கருத்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன்  நீண்ட காலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமல்   இருப்பது கவலைக்குரியது.

இங்குப் பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன். இந்த பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியின் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன். மழைக் காலங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக இங்குள்ள பொதுமக்கள் என்னிடம்  தெரிவித்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையக் கட்டடமும் மோசமான நிலையில் காணப்படுவதோடு  இப்பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவது சுகாதார சீர்கேட்டை எமது மக்களுக்கு ஏற்படுத்தும்.  அத்துடன் உடனடியாக நீண்ட தூரம் பிரயாணம் செய்யவரும் பயணிகள் தங்குவதற்கும்  குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும்  என்னால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50