ஜனாதிபதி பெயரை வைத்து மோசடி: உடனடியாக பொலிஸில் அறிவிக்கவும் 

Published By: Digital Desk 3

14 Dec, 2019 | 11:33 AM
image

ஜனாதிபதி பெயரை வைத்து இடம்பெறும் மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு அறிவித்தலொன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்து, பொதுமக்கள் மீது அழுத்தங்கள், அச்சுறுத்தப்படுதல், தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறுகின்ற விடயங்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்தும் ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக குறிப்பிட்டும் சில நபர்களால் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுதல் போன்ற பல்வேறு மோசடி செயல்கள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்துள்ளது.

இவ்வனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதியினதும் ஜனாதிபதி செயலகத்தினதும் அனுமதியின்றியே இடம்பெற்றுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தயவுடன் அறியத்தரும் அதேவேளை, அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தகவலறியக் கிடைப்பவர்கள் தாமதமின்றி உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02