கொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து 

Published By: Vishnu

13 Dec, 2019 | 06:52 PM
image

கொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து  வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும். அத்துடன்   சேவையில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களின்  சம்பளம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு  விரைவில்  தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என துறைமுகங்கள்  கப்பல்துறை மற்றும் வீதி பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில்  கலந்துக் கொண்டு கருத்தக்கையில்   அவர் மேற்கண்டாறு  குறிப்பிட்டார்.

1985 ஆம் ஆண்டு திரு. லலித் அத்துலத்முதலியவினால்  இப்பாலர் பாடசாலையினை ஆரம்பித்துவைக்கப்பட்டது . அப்போதை வேளையில்  துறைமுகத்தினுள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டது .அவர் துறைமுகம் தொடர்பில் தூர நோக்கத்துடன் செயற்பட்டார். அதுபோன்றே மஹிந்த ராஜபக்ச காலத்திலும் இத்துறைமுகத்தினுள் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

துறைமுக அதிகார சபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும். பிள்ளைகளை பராமரிப்பதற்கு நல்லதொரு மனநிலை இருக்க வேண்டும். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் சம்பள பிரச்சினையை எதிர்க்கொள்கின்றார்கள். இப்பிரச்சினையை விரைவில் தீர்வு  பெற்றுக் கொடுக்கப்படும் .

 பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் இ அவர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்  8000 ற்கும் அதிகமான ஊழியர்கள் துறைமுக அதிகார சபையில் பணியாற்றிய போதிலும் 2019 ஆம் ஆண்டு 28 பிள்ளைகள் மாத்திரமே இப்பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்துக்கொண்டுள்ளார்கள். .

தற்போதைய நிலையை காட்டிலும் இங்குள்ள வசதிகளை மேம்படுத்தி சிறந்த பாலர் பாடசாலையாக தரமுயர்த்தப்படும் . இதன் ஊடாக இங்கே பராமரிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கைளை அதிகரித்து இ துறைமுக ஊழியர்கள் மன நிம்மதியுடன் தங்கள் பணிகளை முன்னெடுப்பதற்கான சூழல்  ஏற்படுத்தப்படும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36