கொழும்பு மாநகரசபையின் அடுத்த ஆண்டுக்கான உத்தேச எதிர்பார்க்கை வருமானம்!

Published By: Vishnu

12 Dec, 2019 | 06:46 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான உத்தேச எதிர்பார்க்கை வருமானம் 16 பில்லியன் 145 மில்லியனே 9 இலட்சத்து 94ஆயிரம் ரூபா எனவும் உத்தேச எதிர்பார்க்கை செலவீனம் 16 பில்லியன் 144 மில்லியனே 6 இலட்சத்தி 92 ஆயிரம் ரூபா ஆவதுடன், ஆயிரத்தி 302 ரூபா மீதப்படுத்தப்படுகின்றது என கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று காலை 10.30மணியளவில்  சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகரசபையின் அடுத்த வருடம் எதிர்பார்க்கை வருமானமாக, வரிப்பணம் மற்றும் வரி 5,205,501,000 ரூபா, உத்தரவுப்பத்திரங்கள் 83,322,000 ரூபா, வசதிகள் 885,550,000ரூபா,அறவிடக்கூடிய கட்டணங்கள் 4,125,443,000ரூபா, வாடகை 382,382,000 ரூபா, விற்பனை 14,345,000ரூபா, வட்டி 266,641,000ரூபா, மொத்த மீண்டுவரும் வருமானம் 10,963,184,000ரூபா, அரசு உதவி, பிற உதவி மற்றும் மீளளிப்புகள் 5,088,810,000ரூபா, மூலதன வரவு 94,000,000ரூபா, அதன் பிரகாரம் மொத்த வருமானமாக 16,145,994,000 ரூபா எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று அடுத்த வருடத்துக்கான எதிர்பார்க்கை செலவீனமாக, ஊழியர் செலவு 5,591,589,000ரூபா, வழங்கல் 1,289,389,000ரூபா, நிறுவன மற்றும் நானாவித 2,719,087,000ரூபா, நடைமுறை நிதிக்கட்டணங்கள் 137,065,000ரூபா,நன்கொடைகள் மற்றும் பங்களிப்புக்கள்842,400,000ரூபா, மூலதன சொத்துக்களின் பராமரிப்பு 1.054,087,000ரூபா, மூலதன நிதி செலவுகள் 101,555,000ரூபா, மீண்டுவரும் செலவு 11,735,172,000ரூபா, மூலதன செலவு 2,341,599,000, உட்கட்டமைப்பு 2,067,921,000ரூபா. மொத்த செலவீனமாக 16,144,692,000ரூபாவாகும். அதன் பிரகாரம் ஆயிரத்தி 302 ரூபா பேணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08