அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கிப் பாதுகாப்பேன் -  கிழக்கின் புதிய ஆளுநர் சூளுரை

Published By: Digital Desk 4

12 Dec, 2019 | 04:22 PM
image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கி அதனூடாக மத ஸ்தலங்களது பாதுகாப்பினை உறுதிசெய்வதில் கூடிய கவனம் எடுப்பேன் என கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டபின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி என்னை நியமித்தபோது ஆரம்பத்தில் எனக்கும் தயக்கம் இருந்தது. எனினும் இந்த நியமனத்தைக் கொண்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என துணிவு பிறந்தது.

அழகிய ரம்மியமான கிழக்கு மாகாணத்தினை மேலும் அழகுபடுத்த வேண்டியது எமது கடமை. அதனை முன்னெடுக்க என்னுடன் அனைவரும் கை கோர்க்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்துள்ள பிரதேசமாகும். இவ்விரு வளங்களையும் கொண்டு நாம் எல்லோருமாக இணைந்து இந்த மாகாணத்தினை கட்டியெழுப்பி அதன் மூலமாக நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்.

இப்பொழுது இளைஞர்கள் தாமாகவே முன்வந்து நாட்டை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் இணைந்திருக்கின்றனர். யாரும் கட்டாயப்படுத்தாமல் அவர்களாகவே முன்வந்தமை வரவேற்கத்தக்கது.

நாட்டில் நிலவுகின்ற வறுமையை ஒளிப்பதற்காக பசுமை புரட்சி எனும் திட்டம் முன்னெடுக்கப்படும்.

வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி அதனூடாக பொருளாதாரத்தைப் பெறுவதோடு ஆரோக்கிய உணவு நுகர்வையும் ஊக்குவிக்க வேண்டும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04