2019.12.10 அமைச்சரவை தீர்மான முழு விபரம்!

Published By: Vishnu

12 Dec, 2019 | 02:33 PM
image

2019.12.10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்!

 1. 2018 - 2019 பெரும்போகத்தினால் நெல் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை நெல்லை அரிசியாக்கி லங்கா சத்தோச சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2018 - 2019 ஆண்டில் பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை நெல்லின் ஒரு பகுதியை நடுத்தர மற்றும் ஆலைகள் ஊடாக அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரிக்கும் தன்மையின் காரணமாக மேலே குறிப்பிட்ட வகையில் கொள்வனவு செய்யப்பட்ட தொகைகளில் இருந்து எஞ்சியுள்ள தற்போதைய நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களில் உள்ள 42,000 மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கி அந்த அரிசியை இலங்கை சத்தோச நிறுவனத்தின் வர்த்தக வலைப்பின்னலின் ஊடாக வழங்குவதின் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று எதிர்வரும் 2 தொடக்கம் 3 மாதக் காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதற்கும் அரிசி வகைகளின் சில்லறை விலை 98 ரூபாவாக முன்னெடுப்பதற்கு முக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்கியுள்ள உடன்பாட்டை கவனத்திற் கொண்டு அரிசி ஒரு கிலோவின் ஆகக்கூடிய சில்லறை விலை 98 ரூபாவாக வரையறுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  மேலும் பண்டிகைக் காலப்பகுதியில் விஷேடமாக பெருந்தோட்டப்பகுதிகளிலும் நகரப்பிரதேசங்களிலும் வாழும் பொது மக்களுக்கு தேவையான கோதுமை மா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்களின் விலைகளின் அடிப்படையின் கீழ் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் பெரும்போகத்தில் நெல் அறுவடை கிடைக்கும் வரையிலும் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. பாடசாலை கட்டமைப்புக்குள் ஆயிரம் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய வகையிலும் புதிய மும்மொழி பாடசாலையை அமைத்தல்

இலவசமான நீதியான மற்றும் தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் நோக்காக கொண்டு அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் சகல வசதிகளைக்கொண்ட மூன்று பாடசாலைகளை அபிவிருத்தி செய்து அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதே போன்று அனைத்து மாவட்டங்களுக்கும் மும்மொழியை கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய பாடசாலைகள் வீதம் ஆரம்பிப்பதற்கும் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இவ்வாறான இருபது பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.  Z .Score நடைமுறைக்கு அமைவாக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் மாவட்ட அடிப்படைக்கு பதிலாக பாடசாலையை அடிப்படையாக கொண்ட புதிய சமூகவியல் ஒன்றை நடைமுறையை அறிமுகப்படுத்துதல்.

அனைத்து மாணவர்களுக்காக சமமான நீதியான கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பான போதிலும் தற்பொழுது மாகாண மாவட்டத்தை போன்று பாடசாலைகளுக்கு இடையிலும் கல்வி வசதி மற்றும் கல்வியின் தர தன்மையில் வெவ்வேறான முரண்பாடுகள் நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் தற்பொழுது அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக மாவட்டத்தை அடிப்படையாக பயன்படுத்தப்படும் Z .Score நடைமுறைக்கு பதிலாக பாடசாலையை அடிப்படையாக கொண்ட புதிய சமூகவியல் நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கான சம்பந்தப்பட்ட விடயத்துறை தொடர்பிலான நிபுணர்களை கொண்ட குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. யானைகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பராமரிப்பதற்கும் அதன் பின்னரான நடவடிக்கைகளுக்கான உத்தேச வேலைத்திட்டம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள யானைகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான பிரச்சினைகள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள தேசிய பிரச்சினையாக காணப்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தற்பொழுது உள்ள மின்சார வேலிகளை புதுப்பிப்பதற்காக முறையாக முன்னெடுத்து பராமரிப்பதற்காகவும் இதற்கு தேவையான மனித வளம் மற்றும் பௌதீக வளத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இதன் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர் அடங்கலாக அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காகவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. அரச காணி முகாமைத்துவ பணியை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்.

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சுக்கு உட்ப்பட்டதாக உள்ள நிறுவனங்களின் தலைமையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்கள் தொடர்பிலான தகவல்கள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவை கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைவாக காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டம் மற்றும் அரசாங்கத்தின் காணி கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி கச்சேரி நடத்தப்பட்டு அனுமதி பத்திரம், கொடுப்பனவு பத்திரம் மற்றும் குத்தகைக்கு வழங்குதல் நடமாடும் சேவை தினம் மற்றும் துறையுடன் தொடர்புபட்ட தின வேலைத்திட்டத்தை நடத்துதல் உரித்தை பதிவு செய்யும் கட்டளைச்சட்டத்தின் கீழ் உரிமை சான்றிதழை விநியோகித்தல் , அரசாங்கத்தின் காணி தரகு கட்டமைப்பு முறையாக முன்னெடுத்தல் வீதி வரைபடத்தை புதிய திருத்தத்தை வெளியிடுதல் மற்றும் காணி வழிகாட்டி ஊட்டத்தை தயாரித்தல் போன்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கபட்டிருப்பதாக அமைச்சர் அவர்களினால் மேலும் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கு அமைவாக குத்தகையாளர்கள் சிரமத்திற்குள்ளாகாத வகையில் குத்தகை பணத்தை செலுத்த கூடிய வகையில் விரிவான மற்றும் இலகுவான நடைமுறை ஒன்றை வகுப்பதற்காக சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கென அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

06. வாழ்க்கைச் செலவு தொடர்பில் அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமித்தல்.

வாழ்க்கை செலவுக்கான விடயங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியை தலைவராக கொண்டதும் கீழ் காணும் அங்கத்தவர்களை கொண்ட வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கௌரவ பிரதமர் மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்

• மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் அவர்கள்.

• கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் அவர்கள் மற்றும்

• பெருந்தோட்ட தொழில்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் அவர்கள்.

இதே போன்று , இதன் துணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 6 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 12 அதிகாரிகளையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

07. ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை நிறுவுதல்

அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களின் பயிற்சியற்ற தொழில் வாய்ப்புக்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும் சமூகத்தில் குறைந்த வருமானத்தை கொண்ட குழுவினர் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் மற்றும் ஏனைய அனுசரனைகளின் அடிப்படையில் இவ்வாறான தொழில் வாய்ப்புகளுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியை கொண்ட ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை ஒன்றை அரசாங்கத்தின் திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவுக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளுதல் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வதற்கும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதியளவில் இந்த திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் செலவுகளை அறவிடும் அடிப்படையில் இந்த பணிக்குழுவின் சேவையை அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

08.அமைச்சரவையின் அங்கத்துவம் அல்லாத இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் மற்றும் பணிகளை ஒப்படைத்தல்.

அமைச்சரவையில் அங்கத்தவர் அல்லாத இராஜாங்க அமைச்சர்களுக்கு அரசியல் யாப்பின் 44 (5) இன் கீழான ஒழுங்கு விதிகளுக்கு அமைய விடயதானங்கள் மற்றும் பணிகளை ஒப்படைப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. நிதி நகரத்திட்டத்தில் தற்போதைய விடயதானங்களை மதிப்பீடு செய்தல்

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் சீன முதலீட்டாளர் சி.எச்.ஈ.சி போர்ட் சிட்டி கொழும்பு ( தனியார்) நிறுவனத்துடன் ஒன்றிணைந்து தனியார் துறையின் முதலீட்டு ரீதியில் 'கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்' 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2015.01.08 அன்றைய தினத்திற்கு பின்னர் இந்த திட்டத்தின் ஆரம்ப விடயதானத்தில் மாற்றத்தை மேற்கொண்டு 'நிதி நகரத்திட்டம்' என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது வெளி ஆலோசகர்களின் ஒத்துழைப்பு மற்றும் சட்ட திருத்தம் தயாரிப்பின் செயற்பாட்டின் மூலம் 'கொழும்பு நிதி நகரம்' என்ற பெயரில் விஷேட பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதற்கான திருத்த சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல், சமூக மற்றும் சுற்றாடல் சூழலில் இந்த திட்டத்தில் திருத்த விடயதான நோக்கம் மற்றும் அந்த விடயதான நோக்கத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையை மதிப்பீடு செய்யும் தேவை ஏற்பட்டிருப்பதுடன் அதற்கான விடயதான துறையை சேர்ந்த நிபுணர்களை கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02