காலிமுகத்திடல் நடைபாதையை சூரிய சக்தி பயன்படுத்தி ஒளியூட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் நடவடிக்கை

Published By: R. Kalaichelvan

11 Dec, 2019 | 01:13 PM
image

(நா.தனுஜா)

காலிமுகத்திடல் நடைபாதையில் போதிய வெளிச்சம் இன்மையால் சூரியசக்தி மூலம் இயங்கும் மின்குமிழ்களைப் பயன்படுத்தி அப்பகுதியை ஒளியூட்டுவதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

காலி முகதிடலிற்கு வருகைத்தருகின்ற பொது மக்களுக்கு இயற்கையான வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மக்களுக்கான நடைபாதையில் காணப்படுகின்ற வெளிச்சக் குறைப்பாட்டை நிவர்த்திச் செய்வதற்கு சூரிய சக்தியின் மூலம் ஒளிரும் மின்குமிழ்களை பொருத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி , பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

 அக்கலந்துரையாடலின் போது சூரியசக்தி மின்குமிழ்களை பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை பெருமளவில் செலவிடுவதற்கு காலிமுகதிடலிற்கு வருகைத்தருகின்றார்கள். அவ்வாறிருக்க மாலை வேளையில் இந்நடைபாதையில் குறைவான வெளிச்சம் இருக்கின்றமையால் மக்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளிற்கு முகங்கொடுக்க நேரிடுவதால்  மக்களால் அவர்களது ஓய்வு நேரத்தை உரியமுறையில் பயன்படுத்த முடியாமலுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி காலிமுகத்திடலிலுள்ள நடைபாதைகளில் சூரிய சக்தி மின்குமிழ்களை பொருத்தி ஒளியூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10