இனப்படுகொலை குற்றச்சாட்டுகளிலிருந்து மியன்மாரை காப்பாற்றுவதற்காக சர்வதேச நீதிமன்றம் சென்றார் ஆங்-சான்- சூகி

Published By: Rajeeban

10 Dec, 2019 | 04:26 PM
image

ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான மியன்மாரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக ஆங் சான் சூகி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

ஹேக்கில் மியன்மாரிற்கு எதிராக இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணைகளில் அவர் தனது நாட்டின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவுள்ளார்.

2017 ம் ஆண்டு மியன்மாரின் ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிராக இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று நாட்கள்  ஹேக்கின் சர்வதேச நீதி  நீதிமன்றம் ஆராயவுள்ளது.

கடந்த நவம்பரில் காம்பியா பௌத்தர்கள் பெரும்பான்மையாகவுள்ள மியன்மாரிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

1948 இன் இனப்படுகொலை தொடர்பான ஐநா பிரகடனத்தின் கீழ் தனக்குள்ள கடப்பாடுகளை மியன்மார் மீறிவிட்டதாக காம்பியா தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவுள்ளது இது மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

17 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில்  ஆங் சான் சூகி இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வழமை போன்று நிராகரிப்பார்,ரொகிங்யா தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கையிலேயே தனது நாட்டு இராணுவம் ஈடுபட்டது என வாதிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

காம்பியா 2017 ஆகஸ்டில் தடையை அகற்றல் என்ற இராணுவநடவடிக்கையின் மூலம் மியன்மார் இராணுவம்  பரந்துபட்ட திட்டமிட்ட அட்டுழியங்களில் ஈடுபட்டது,இது இனப்படுகொலை என வாதிடவுள்ளது.

மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கியநாடுகளின் சர்வதேச  நீதி  நீதீமன்றம் விசாரணைகளை  ஆரம்பிக்கவுள்ள நிலையில் மியன்மாரின் ரொகிங்யா இனத்தை சேர்ந்த மக்கள் நீதிக்காக தாங்கள்காத்திருப்பதாகதெரிவித்துள்ளனர்.

மியன்மார் இராணுவம் என்னையும் எனது சமூகத்தையும் சேர்ந்த பெண்களை  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது என ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ள  22 ஹசினா பேகம் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நாங்கள் நீதியை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எனக்கு இந்த விடயங்களை செய்தார்கள்,எனது உறவினர்களிற்கும் நண்பிகளிற்கும் இந்த அநீதியை இழைத்தார்கள்,நான் பொய்சொல்லவில்லை, என்னால்இதனை முகத்திற்கு நேரே தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸ் அகதிமுகாமில் உள்ள ரொகிங்யா அகதிகள் தாங்கள் நீதிக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடப்போவதாகவும்  நோன்பிருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17