சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பிடித்த சந்தேக நபர்கள் கைது

Published By: R. Kalaichelvan

10 Dec, 2019 | 02:34 PM
image

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரம்  இன்றி கடல் அட்டைகள் பிடித்த 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கை மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 

அங்கு, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றினை சோதனை செய்த போது அதிலிருந்த  409 கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணையில், மீனவர்கள் செல்லுபடியாகும் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,36,42 மற்றும் 45 வயதான மன்னார் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் 409 கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04