அரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்

Published By: J.G.Stephan

10 Dec, 2019 | 11:03 AM
image

(நா.தனுஜா)

நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பின் பிர­காரம், நான்கில் ஒரு­ப­கு­தி­யினர் அரச சேவையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்கும் அதே­வேளை அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வைகள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்­படும் நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இலங்­கையின் 9 மாகா­ணங்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 18–80 வயது வரை­யான 1300 பிர­ஜை­க­ளிடம் ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்­பினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இலஞ்சம், ஊழல் அனு­பவம் தொடர்­பான கருத்­துக்­க­ணிப்பு தொடர்­பான இறுதி அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அது­கு­றித்துத் தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அந்த சந்­திப்பின் போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,

ஊழல் கார­ண­மாக தனி­நபர் ஒரு­வரின் வாழ்க்கை எவ்­வாறு பாதிப்­ப­டை­கின்­றது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­துடன், தேசிய மட்­டத்தில் ஊழலை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து பொது­மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தையும் நோக்­காகக் கொண்டே இலஞ்சம் ஊழல் அனு­பவம் தொடர்பில் மக்கள் மத்­தியில் இக்­க­ருத்­துக்­க­ணிப்பு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில் நாட்­டு­மக்கள் நீதித்­துறை, அர­சாங்கம் மற்றும் பொலிஸ் ஆகி­ய­வற்றில் எந்தக் கட்­ட­மைப்பைப் பெரிதும் நம்­பு­கின்­றார்கள் என்ற கேள்­விக்கு கருத்­துக்­க­ணிப்பு முடி­வு­களின் பிர­காரம் 73 சத­வீ­த­மானோர் நீதி­மன்­றத்தின் மீது பெரிதும் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­துடன், அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை 47 சத­வீ­த­மா­கவும், பொலிஸார் மீதான நம்­பிக்கை 57 சத­வீ­த­மா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.

அதே­வேளை இக்­க­ருத்­துக் ­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் நான்கில் ஒரு­ப­குதி மக்கள், தாம் அர­ச­சே­வையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனினும் அவர்­களில் மூன்­றி­லொரு பிரி­வினர் இவ்­வாறு இலஞ்சம் வழங்­கு­வது ஏற்­பு­டை­ய­தல்ல என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

நாட்டின் 9 மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­ பட்ட கருத்­துக்­க­ணிப்பில் பதி­ல­ளித்­த­வர்­களில் அரைப்­பங்­கினர் ஊழல் மற்றும் இலஞ்­சத்தின் ஒரு வடி­வ­மாக பாலியல் இலஞ்­சமும் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்­ளனர். அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வை கள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி ­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்­ப­டு­கின்­றது. பாலியல் இலஞ் சம் கோரப்­படும் நிலை­மை­யா­னது கிரா­மப்­பு­றங்­களை விடவும் நகர்ப்­பு­றங்­களில் அதி­க­மாக உள்­ள­போ­திலும் அதனால் தோட்­டப்­புற மக்­களே இல­குவில் பாதிப்­ப­டையக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர் என்று கருத்­ துக்­க­ணிப்பு முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள் ­ளன. மேலும் இக்­க­ருத்­துக்­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 86 சத­வீ­மானோர் இலங்­கையில் இலஞ்சம், ஊழல் தொடர்­பான குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கென ஆணைக்­கு­ழு­வொன்று இயங்­கு­கின்­றது என்­பதை அறிந்­தி­ருக்­கின்ற போதிலும் 72 சத­வீ­த­மானோர் இக்­குற்­றங்கள் குறித்து முறை­யி­டக்­கூ­டிய பொறி­முறை பற்­றிய தெளி­வற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளனர்.

இந்­நி­லையில் இக்­க­ருத்­துக்­க­ணிப்பு முடி­வு கள் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அரசு மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய தேவை ­யொன்­றையும் அதற்­கான சந்தர்ப்பத்­தை யும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது என்று நேற்­றைய தினம் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர சுட்டிக்காட் டினார். 

அதேவேளை அரசாங்கமும் பொலிஸா ரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற் படுத்தக்கூடிய விதமாக செயற்பட வேண் டும் என்று வலியுறுத்திய அவர், பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலை யையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதன் செயற்பாடு களை விரைவுபடுத்த வேண்டியதன் அவ சியத்தையும் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55