போதைப்பொருளுக்கெதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

09 Dec, 2019 | 06:11 PM
image

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் கஞ்சா மற்றும் குடு போன்ற போதைப்பொருள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாருக் கோரி பெண்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 11.30 மணியளவில் தேக்கவத்தை கிராமத்தில்  உள்ள சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பெண்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் எமது வருங்கால சிறுவர் சங்கத்தை போதை பெருளால் கெடுக்கப்போகிறீர்களா, போதைபொருளை எமது கிராமத்தில் இருந்து தடுப்போம், என்று பல்வேறு வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

எமது தேக்கவத்தை கிராமத்தில் தொடர்ந்து கஞ்சா, குடு விற்பனை செய்து வருவதாகவும் இதனை  நிறுத்துமாறு கோரி பொலிசாருக்கும் ஏனைய இடங்களுக்கும் அறிவித்தல் கொடுத்தும் இதுவரைக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில வேளைகளில் கஞ்சாவுடன் பிடிபடுகின்றவர்கள் இரண்டு மூன்று நாட்களில் பொலிசாரால் விடுதலை செய்யப்பட்டு மீண்டும்  வியாபாரத்தை செய்கின்றனர்.

இங்குள்ள சிறுவர்கள் உட்பட பெரியவர்களும் கஞ்சாவை குடித்துவிட்டு வீடுகளில் பாரிய பிரச்சனைகள் செய்வதும் இதன் காரணமாக வீதிகளில் பாடசாலை சிறுவர்கள் மற்றும் பெண்களும் போகமுடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்துவதோடு குறித்த கிராமத்தில் உள்ள தனியார் விடுதிகளை அகற்றுமாறும் இவ் இரண்டு செயற்பாட்டின் மூலம் பெண்கள் பாதிப்படைகின்றனர். அத்தோடு பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்க முடியாமலும் உள்ளது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இதன் போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற  இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் இதற்கான முடிவினை தாங்கள் பெற்றுத்தருவதாகவும் தங்களால் செய்ய கூடிய சட்ட நடவடிக்கையை உடன் செய்து தருவதுடன், இது தொடர்பாக ஏற்கனவே பலபேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த இடத்திற்க்கு வருகை தந்த பெரமுன கட்சியின் உறுப்பினர் சந்திரிக்கா இந்த கஞ்சா, குடு போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பாக பலதடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த தடைவையுடன் நிருத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் இந்த ஆர்ப்பாட்டத்தை விட பாரிய அளவிலான மக்கள் போராட்டத்தை மக்களுடன்  இணைந்து கஞ்சா, குடு மற்றும் போதைபொருள் பாவனையை இக்கிராமத்தில் நிறுத்துவதற்க்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08