2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை!

Published By: Vishnu

09 Dec, 2019 | 05:20 PM
image

2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பீபால உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது.

எனவே டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது.

இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்காவுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட்...

2024-03-19 15:26:44
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46