நல்ல சிந்தனைகளே தலைவர்களை வாழ வைக்கும் !

09 Dec, 2019 | 04:36 PM
image

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க்ஷ­வுக்கு மிகப் பெரிய சவால்கள் உள்­ளன. இலங்­கையின் தற்­போ­தைய சூழல்   பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் ஆதிக்கம் நிறைந்ததொன்­றா­கவே இருக்­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையே பாரிய சந்­தே­கங்­களும், அச்­சமும் இருக்­கின்­றன. இந்­நி­லையை மாற்­றி­ய­மைத்து இலங்­கையர் என்ற கொள்­கையின் அடிப்­ப­டையில் இனங்­க­ளுக்கு இடையே ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய தேவையும் இருக்­கின்­றது.

இத­னி­டையே வல்­லா­திக்க நாடுகள் இலங்­கையில் தமது கால்­களை ஆழப்­ப­திக்க வேண்­டு­மென்­பதில் போட்­டி­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நா­டுகள் தங்­களின் செயற்­திட்­டங்­க­ளுக்கு தலை­யாட்டும் அர­சாங்­கத்­தையே நிறு­வ­தற்கு முயற்­சி­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதே வேளை, இந்­நா­டு­களை நிரா­க­ரிக்­கவோ அல்­லது முழு­மை­யாக ஏற்றுக் கொள்­ளவோ முடி­யாத நிலையும் இருக்­கின்­றன.

இவ்­வாறு பல சவால்கள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷவின் முன்னால் இருக்­கின்­றன. இவற்றை தீர்த்து வைப்­பதும் அல்­லது பூதா­கா­ர­மாக்­கி­வி­டுவதும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷவின் ஆளு­மை­யிலும், கொள்­கை­க­ளி­லுமே தங்­கி­யி­ருக்­கின்­றன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ சிங்­கள மக்­களின் 70 வீத வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட முதல் ஜனா­தி­ப­தி­யாக இருக்­கின்றார். அவர் இவ்­வாறு சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளி­னால் தான் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்று திட்­டங்கள் வகுக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. தான் சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி என்று கோத்­தா­பய ராஜப­க் ஷவும், முதற் தட­வை­யாக சிங்­க­ள­வர்­க­ளினால் ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார் என்று பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களும், பெளத்­த­ அ­மைப்­புக்­களும் பெருமை பேசிக் கொள்­வ­த­னையும் காண்­கின்றோம்.

இருந்­தாலும் அவர் நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் ஜனா­தி­பதி. அதனால், பார­பட்­ச­மின்றி செயற்­பட வேண்­டிய கடமைப் பொறுப்பு அவ­ருக்கு இருக்­கின்­றது. இதேவேளை, இது­வரை தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­க­ளுக்கு கிடைத்­த­தொரு அங்­கீ­காரம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷவுக்கு கிடைக்­க­வில்லை என்­பதில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ கவனம் செலுத்த வேண்டும். அதா­வது, சிங்­கள மக்­களின் அதி­கூ­டிய வாக்­கு­களைப் பெற்றுக் கொண்ட போதிலும், தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை இனங்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வதில் அவர் தவ­றி­யுள்ளார். சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு கொள்கை வரை­யப்­பட்­ட­தனைப் போன்று தமிழ், முஸ்லிம் மக்­களின் மனங்­களை வெல்­லு­வ­தற்­கு­ரிய கொள்­கைகள் அவரால்  வகுக்­கப்­ப­ட­வில்லை. அதனால், சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி என்ற புகழ்ச்­சியை விடவும், மூவின மக்­க­ளி­னதும் அமோக ஆத­ர­வினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி என்ற புகழ்ச்­சியே பெரு­மைக்­கு­ரி­ய­தாகும்.

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தமக்கு கிடைக்­காது என்ற கார­ணத்­தினால் சிங்­கள மக்­களின் வாக்­கு­களை இலக்கு வைத்து கொள்கைகள் வரை­யப்­பட்­டாலும், தமது செயற்­பா­டு­களின் மூல­மாக தமிழ், முஸ்லிம் மக்­களின் மனங்­களை வெல்ல முடியும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ எடுக்க வேண்டும்.

இலங்கை பல்­லி­னங்­களைக் கொண்ட­தொரு நாடாகும். இங்­குள்ள இனங்­க­ளுக்கு இடையே வேறு­பட்ட அபி­லா­ஷை­களும், தேவை­களும் இருக்­கின்­றன. முரண்­பா­டு­களும் உள்­ளன. அபி­லா­ஷை­களும், தேவை­களும் வேறு­பட்­டி­ருப்­ப­தனை தடுக்க முடி­யாது. ஆனால், முரண்­பா­டு­களை தடுக்க முடியும். இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டுகள், சந்­தே­கங்கள் என்­பன அர­சியல் தேவைக்­காக திட்­ட­மிட்டு வளர்க்­கப்­பட்ட நச்சு மர­மாகும். இந்த முரண்­பா­டு­களும், சந்­தே­கங்­களும் அர­சியல் தலை­வர்­க­ளினால் மேலும் வளர்க்­கப்­பட்டு வரு­கின்­ற­தே­யன்றி, அதனை வேரோடு அழிப்­ப­தற்கு எந்­த­வொரு ஜனா­தி­ப­தியும், அர­சாங்­கமும் இது­வரை நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

ஆதலால், சிங்­கள மக்­களின் 70 வீத ஆத­ரவைப் பெற்ற ஒரு ஜனா­தி­பதி என்ற வகையில் அர­சி­யல்­வா­திகள், இன­வா­திகள் உள்­ளிட்­ட­வர்­க­ளினால்  சிங்­கள மக்­க­ளி­டையே விதைக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை மக்­க­ளையும், அர­சியல் தலை­வர்­க­ளையும் பற்­றிய பீதி­யையும், சந்­தே­கங்­க­ளையும் இல்­லாமல் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இனங்­க­ளுக்கு இடையே புரிந்­து­ணர்­வையும், சகிப்புத் தன்­மை­யையும் உரு­வாக்கக் கூடிய செயற்திட்­டங்­களை வகுக்க வேண்டும். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ­வுக்கு இருக்­கின்ற சிங்­கள மக்­களின் பேரா­த­ரவை அவர் சரி­யாகப்   பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.  ஜனா­தி­பதி கோத்­த­பய ராஜப­க் ஷ நாட்டை பிரித்துக் கொடுக்­க­மாட்டார் என்ற நம்­பிக்கை சிங்­கள மக்­க­ளி­டையே ஆழப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதனை பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­றது. அப்­போதே  அவர் சிறந்­த­தொரு அர­சியல் தலை­வ­ராக திகழ்வார்.

2019இற்கு முதல்  சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளி­னால்தான் ஜனா­தி­ப­திகள் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவ்­வாறு சிறு­பான்­மை­யி­னரின் வாக்கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­திகள் சிறு­பான்­மை­யி­னரின் அபி­லா­ஷை­களை புறக்­க­ணித்து, சிங்­கள மக்­களின் அபி­லா­ஷை­க­ளையே நிறை­வேற்­றி­யுள்­ளார்கள். பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யா­கிய கோத்­தா­பய ராஜப­க் ஷ தனக்கு பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளிக்­காத தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­னதும் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றக் கூடி­ய­தொரு ஜனா­தி­ப­தி­யாக விளங்கும் போது, எதிர் காலத்தில் ஆட்சி செய்யும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மான ஒரு­வ­ராக திகழ முடியும். அத்­தோடு இலங்­கையின் அர­சி­யலில் புதி­ய­தொரு அர­சியல் யுகத்தை ஏற்­ப­டுத்­தவும் முடியும்.

புதிய ஜனா­தி­ப­தியின்   அதி­ரடி நட­வ­டிக்­கைகள் நாட்டு மக்­க­ளி­டையே பலத்த வர­வேற்பை பெற்­றுள்­ளன. அதே போன்று சிறு­பான்­மை­யி­னரின் விவ­கா­ரங்­க­ளிலும் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே நல்­லெண்­ணத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தமிழ், முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த­வேண்டும். அவர்­களின் நியா­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்றுக் கொடுக்க முன்­வர வேண்டும்.

தமி­ழர்­களில் மிகக் கூடு­த­லா­ன­வர்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமக்கு எதி­ராக வாக்­க­ளித்த போதிலும், தமது நல்­லெண்­ணத்தை தமி­ழர்­க­ளுக்கு காட்­டு­வ­தற்­காக ஆறு­முகம் தொண்­டமான், டக்ளஸ் தேவா­னந்தா போன்­றோ­ருக்கு அமைச்சர் பத­வியை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ வழங்­கி­யமை நல்­ல­தொரு முடி­வாகும். அதே போன்று புலி­களின் மாவீரர் நினைவு தினத்­திற்கு தடை விதிக்­கப்­படும் என்று நாடு­மு­ழு­வதும் நம்­பிய போதிலும், அதற்கு எந்த தடை­க­ளையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. போராட்­டத்தில் மர­ணித்­த­வர்­களின் உற­வி­னர்கள் அவர்­களை நினைவு கூரு­வ­தற்கு சுதந்­திரம் அளித்­தமை தமி­ழர்­க­ளிடம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ வெளிப்­ப­டுத்­திய நல்­லெண்­ணங்கள் என்றே அடை­யாளங் காண வேண்­டி­யுள்­ளது.

ஆனால், இத்­த­கை­ய­தொரு நல்­லெண்­ணத்தை முஸ்­லிம்­க­ளிடம் காட்­ட­வில்லை. முஸ்­லிம்­களில் ஒரு­வரை அமைச்­ச­ரா­கவோ அல்­லது இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவோ நிய­மனம் செய்­தி­ருந்தால் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளிக்­காது போனாலும், நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் முஸ்லிம் ஒரு­வரை அமைச்­ச­ராக நிய­மனம் செய்­துள்ளேன் என்று நல்ல செய்­தியை வலி­யு­றுத்­தி­யி­ருக்க முடியும். இதனால் , நாம் கடந்த அர­சாங்­கத்தைப் போன்று தொடர்ந்து புறக்­க­ணிக்கப்­ப­டு­வோமா என்ற நிலைப்­பாட்டில் முஸ்­லிம்கள் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதேவேளை, கோத்­தா­பய ராஜப­க் ஷ­வுக்கு வாக்­க­ளித்த முஸ்­லிம்­களும் கவ­லை­ய­டைந்­துள்­ளார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. கடந்த அர­சாங்­கத்தில் தமி­ழர்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்ட போதிலும், முஸ்­லிம்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. தாம் வாக்­க­ளித்து தெரிவு செய்த ஜனா­தி­ப­தியும், அர­சாங்­கமும் துரோகம் செய்து, ஏமாற்­றி­விட்­ட­தாக இன்றும் வேத­னைப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளிடம் காணப்­படும் இந்த கவ­லையை இல்­லாமல் செய்­வ­தற்கு முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ எடுக்க வேண்டும்.

நாட்டில் இன­வாதக் கருத்­துக்­க­ளையும், மத நிந்­த­னை­க­ளையும் மக்­க­ளி­டையே பரப்பும் அமைப்­புக்கள், நபர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக முஸ்­லிம்கள் பௌத்த கடும் போக்­கா­ளர்­க­ளி­னாலும், பௌத்த இன­வாத பிக்­கு­க­ளி­னாலும் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பௌத்த அமைப்­புக்கள், பௌத்த கடும்­போக்­கு­வா­தி­க­ளுடன் மஹிந்த தரப்­பினர் நெருக்­கத்தை கொண்­டி­ருந்­த­மை­யால்தான் முஸ்­லிம்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்ற உண்­மையை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்­லிம்­களை பொறுத்தவரை தங்­களின் மதச் சுதந்­திர பாது­காப்­புக்கும், பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்­புக்கும் முன்­னு­ரிமை கொடுப்­ப­வர்கள். இதற்கு அடுத்­த­தா­கவே அர­சி­யலை வைத்­துள்­ளார்கள். தங்­க­ளுக்கு மேற்­படி விட­யங்­களில் பாது­காப்பு இல்­லாது போனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள். ஆனால், தற்­போது பள்­ளி­வா­சல்கள் ஆகி­ய­வற்­றிக்கு பாது­காப்பு இருப்­ப­தா­கவே இருக்­கின்­றது. இது தொடர வேண்டும். சிறிது காலம் அமை­தி­யாக இருந்து விட்டு, பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை பௌத்த இன­வாத அமைப்­புக்கள் மேற்­கொள்ளும் ஒரு நடை­மு­றையும் இருக்­கின்­றது. ஆதலால், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க் ஷ முஸ்­லிம்­களின் பாது­காப்பை தொடர்ந்தும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை ஆத­ரவை இல­கு­வாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த காலங்­களில் முஸ்­லிம்­களின் மீதும், பள்­ளி­வா­சல்கள் மீதும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் சட்­டத்­திற்கு முன் நட­மாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளுக்கு எதி­ரா­கவும், ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

இலங்­கையில் நீண்ட கால­மாக இனப் பிரச்­சினை இருந்து வரு­கின்­றது. இதற்­கு­ரிய தீர்­வு­க­ளையும் காண வேண்­டி­யுள்­ளது. அதி­கா­ரங்­களை பகிர்வு செய்­வது என்­பது பிரி­வி­னை­யல்ல என்­ப­தனை சிங்­கள மக்­க­ளி­னதும், பௌத்த அமைப்­புக்­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்ற ஜனா­தி­பதி என்ற வகையில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு புரிய வைக்க வேண்டும். அர­சியல் அதி­கா­ரங்கள் மேற்­கொள்ளும் போது முஸ்­லிம்­க­ளையும் கவ­னத்திற் கொள்ள வேண்டும். சிறு­பான்­மை­யினர் அதி­காரம் கேட்­பது எல்லாம் ஆட்­சி­யா­ளர்­களின் புறக்­க­ணிப்பு நட­வ­டிக்­கை­களே கார­ண­மாகும்.

ஏப்ரல் 21 தாக்­குதல் முஸ்­லிம்­களை அதிகம் பாதித்­துள்­ளது. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தாரம், அர­சியல், சமூக வாழ்­வியல் ஆகி­ய­வற்றில் பாரிய எதிர் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால், முஸ்­லிம்­க­ளுக்கு தலைக் குனிவு ஏற்­பட்­டுள்­ளது. இத்­தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­தோடும், முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளு­டனும் தொடர்­பு­ப­டுத்தி பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. தற்­போது கூட முஸ்­லிம்கள் அதி­லி­ருந்து மீள­வில்லை. சிங்­கள மக்­க­ளி­டையே இத்­தாக்­குதல் குறித்து மிகுந்த அச்சம் இருக்­கின்­றது. ஆதலால், ஜனா­தி­பதி இத்­தாக்­குதல் குறித்து ஆணைக் குழு ஒன்­றினை நிய­மித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் யார் என்று மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்தி, சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் குறிப்பாக ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் மிகப் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நூறு ஏக்கர் வயல் மற்றும் தென்னந் தோட்டக் காணிகள் கடலினால் காவு கொள்ளப்பட்டுள்ளன. ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுக நிர்மாணிப்பில் உள்ள குறைபாடுகளே கடலரிப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றன. இப்பிரதேச மக்கள் தாங்கள் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் பல தடவைகள் கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும், அவர்கள் வீதிகளை மாத்திரம் அமைப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதனால், இப்பிரதேச மீனவர்களும், மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆதலால், இதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்க வேண்டுமென்று இப்பிரதேச மக்கள் கேட்கின்றார்கள்.

மேற்படி விடயங்களில் ஜனாதிபதி கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் சந்தோஷப்படுவார்கள். அதே வேளை, வாக்களிக்காதவர்கள் நாம் வாக்களிக்கவில்லையே என்று கவலை கொள்வார்கள். அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுப்பார்கள். நல்ல சிந்தனைகளே தலைவர்களை வாழ வைத்துள்ளது. அத்தகைய சிந்தனையாளர்களை வெளிப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்தியவர்களையே வரலாறுகள் தமது பக்கங்களில் கதாநாயகன் என்று அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

- சஹாப்தீன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04