ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை இளைஞர்கள் தவிர்க்கவும்

Published By: Digital Desk 4

09 Dec, 2019 | 02:11 PM
image

தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதினால்,  ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என, உயிர் பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும்  இளைஞர்கள் நீர் நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக்கேட்டுள்ளனர். 

இது தொடர்பிலான  அறிவித்தல்களை நாடளாவிய ரீதியிலுள்ள அப்பகுதி பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விடுத்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால், தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

அத்துடன், ஆழம்மிக்க கடல் பகுதிகள், ஆறுகள் மற்றும்  குளங்களில் நீராடிய பலர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மழை வெள்ளம் காரணமாக முதலைகள், விஷப்பாம்புகள் மற்றும் ஏனைய ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன. இக்காலப்பகுதியில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வதுடன், ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதையும் இயன்றளவு  தவிர்த்துக் கொள்ளுமாறு அவ்வப்பகுதி பிரதேச பொலிஸாரால்  கேட்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33